தினகரனை அதிமுகவில் இணைத்துக் கொள்ள மாட்டாராம் மாஃபா பாண்டியராஜன்!

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் நிறுவனத்தை துவங்கி அதில் தொழில் அதிபராக தன் உழைப்பால் உயர்ந்த மாஃபா பாண்டியராஜன் எந்த கட்சியில் இணையலாம் என்று ஆருடம் பார்த்து கொண்டிருந்த போது சில பத்திரிகையாளர்கள் மூலம் தேமுதிக கட்சிக்குள் சொறுகப்பட்டார். தேர்தலில் செலவு செய்யும் அளவுக்கு செல்வமும், சாதி செல்வாக்கும் இருந்ததால் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றார்.
பின்னர் தேமுதிக கரைவேட்டியோடு அதிமுக சென்றார். பொதுவாகவே பாஜக அனுதாபியான மாஃபா பாண்டியராஜன் அதிமுக கரைவேட்டியில் இருந்து கொண்டு பாஜகவிற்காக வேலை செய்து வரும் நிலையில், இப்போதைக்கு பன்னீர்செல்வம் அணியின் முக்கிய பிரமுகராக இருந்து வருகிறார்.

பொள்ளாச்சியில் பாரம்பரிய மருத்துவர்கள் சங்க விழா நடை பெற்றது. விழாவில், முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் கலந்து கொண்டார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது “ நாங்கள்தான் அதிமுக டி.டி.வி தினகரனை நாங்கள் ஒரு கட்சி உறுப்பினராகக் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. இரட்டை இலை விவகாரத்தில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று காத்திருக்கிறோம். தீர்ப்பு சாதகமாக வந்ததும் ஓ.பி.எஸ். மதுசூதனன் தலைமைக் கழகத்திற்குச் சென்று பொறுப்பேற்று கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருடன் இணைந்து பணியாற்றுவோம். ஆனால் தீர்மானிக்கும் இடத்தில் ஓ.பி.எஸ் இருப்பார்” என்றார் மாஃபா .

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*