பாஜக ஆதரவு முன்பே எடுத்த முடிவை அறிவித்த பழனிசாமி!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக  கூட்டணிகளின் வேட்பாளராக களமிரங்கும் பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்துந்துக்கு அதிமுக அம்மா அணி அதாவது அந்த அணியின் சார்பில் முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படும் எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் பாஜக வேட்பாளரை ஆதரித்துள்ளனர். ஆனால் இது தினகரன் அணி எம்.எல்.ஏக்களுக்கு பொருந்தாது என்று கூறப்படுகிறது.

அதிமுக கட்சி வேறு, ஆட்சி வேறு என்று  இரு வேறு திசைகளில் நடந்து வரும் நிலையில் கட்சி பெருமளவு சசிகலா, தினகரன் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஆனால் ஆட்சி எடப்பாடி பழனிசாமி கைகளில் உள்ளது. இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக பிரதமர் மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசி ஜனாதிபதி தேர்தலில் தங்கள் வேட்பாளரை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து  இன்று அரசு சார்பில் நடந்த இஃப்தார் விழாவின் பின்னர் அதிமுக தலைமைக்கழகம் வந்த எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முக்கிய பிரமுகர்களுடனும், அமைச்சர்களுடனும் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் “ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கிறோம்” என்று முடித்துக் கொண்டார்.

பன்னீர்செல்வத்தை வைத்து அதிமுகவை கைப்பற்ற முயன்ற பாஜக பன்னீர் செல்வத்தால் அது முடியாமல் போன நிலையில் அவரை ஸ்டெப்னி போல பயன்படுத்தி வருகிறது. அவர் பக்கம் இருக்கும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை தெரியவில்லை. ஆனாலும் பன்னீர்செல்வம் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் இணைந்து விட்டது. அந்த இரு அணிகளும் இணைந்து பாஜக வேட்பாளரை ஆதரிக்க வில்லையே தவிற இந்த முடிவு பாஜக வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பே  எடுக்கப்பட்ட முடிவு.

ஆனால் தினகரன் அணி எம்.எல். ஏக்கள் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இஃப்தார் விருந்தை புறக்கணித்ததோடு, ஜனாதிபதி தேர்தல் பற்றிய ஆலோசனைக் கூட்டத்திற்கும் வரவில்லை. அதனால் இந்த தேர்தலில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்  என்ன முடிவெடுப்பார்கள் என்பது ரகசியம்.

எடப்பாடி மற்ற விஷயங்கள் பற்றி யோசிக்காமல் பாஜக வேட்பாளருக்கான ஆதரவை இன்று வழங்க வேண்டும் என்பது டெல்லி உத்தரவு.

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*