யோகா மாஸ்டரும் போட்டோ மாஸ்டரும்!

நேற்று நாடு முழுவதும் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்ட அடுத்த நாளே யோகா விழாவில் கலந்துகொண்டு பிரதமர் மோடி யோகாவுக்கு ஆற்றிய சேவைகள் பற்றி பேட்டியளித்த விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் போன்றவர்களால் ‘யோகா தினம்’ எப்போதும் கொண்டாடப்படும். விவசாயிகள் பிரச்சனை பற்றி கேட்டதற்கு, ‘யோகா’ செய்யும்படி பரிந்துரை செய்தார் ராதா மோகன் சிங். நாடு முழுவதும் விவசாயிகள் பிரச்சனை தொடர்ந்து வரும் வேளையில், யோகா தினத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க நம் பாரத பிரதமர் மோடி-யால் மட்டுமே முடியும்.

 

 

 

 

 

 

இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, யோகா பயிற்சியில் சிறந்து விளங்கியவர். யோகா பற்றிய ஆழ்ந்த கருத்துகளை பேசக்கூடியவர். அவர் விவேகானந்தரின் எழுத்துக்கள் மூலமாக யோகா பற்றி அறிந்திருந்தார். அவரது ஆட்சி காலத்தில் இதுபோன்ற யோகா விழாக்களை நடத்தவில்லை. யோகா பயிற்சியை நாம் விரும்பி செய்ய வேண்டும். ஆனால், மோடி அரசாங்கம் யோகா பயிற்சியை மக்கள் மீது திணிக்கிறது. நேற்று டெல்லியில் உள்ள ராஜ்பத்தில் நடந்த யோகா விழாவை சிறப்பிக்க 35,000 நபர்களை அரசாங்கம் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளது. நாட்டில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளை ஒதுக்கிவிட்டு யோகா தினத்தை பெரிய விழா போல மழையில் நனைந்து கொண்டாடுவது வருந்தத்தக்கது. யோகாவில் சிறந்து விளங்கிய நேரு, தன்னை யோகாவை காக்க வந்த மகான் போல காட்டிக் கொண்டதில்லை. ஆனால் மோடி, யோகா செய்யும் புகைப்படங்களுக்கு இங்கு பஞ்சமிருக்காது.  ‘Modi and yoga’ என்ற வரியை கூகுளில் டைப் செய்து தேடினால், நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் கிடைக்கும்.  ஒரு நாட்டின் பிரதமர் யோகாசனம் செய்யும் புகைப்படங்கள் அதிகமாக கிடைப்பது மோடி அவர்களுக்கு மட்டுமாகதான் இருக்கும்.

தகவல்கள்: NDTV
http://www.ndtv.com/opinion/modis-worldwide-nautanki-of-yoga-773992

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*