ராம்நாத் கோவிந்த் : கோலி என்பவர்கள் யார்?

பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளரான திரு.ராம்நாத் கோவிந்த், ஒரு தலித் என்று தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. திரு. ராம்நாத் கோவிந்த் அவர்கள் அகில இந்திய கோலி சமாஜ் என்னும் சாதிய இயக்கத்தின் தலைவர்,

தீண்டாமை என்பது நேரடியாக தொட்டால் தீட்டு என்பதால் விலக்கப்பட்ட சாதிகளுக்கு மட்டும் பொருந்தாது. இந்து தர்மத்தின் படி ஆகம விதிகளை அனுஷ்டிக்கும் உரிமையோ, சடங்காசாரங்களை பேணும் உரிமையோ மறுக்கப்படும் அனைத்துமே தீண்டத்தகாத சாதிகள்தான். அதாவது கர்ப்பகரக்கிரத்திலிருந்து விலக்கப்பட்ட சாதிகள் அவை.

கோலி என்னும் சாதியை சார்ந்தவர். இந்த கோலி என்பவர்கள் யார்? என்பதை தெரிந்து கொள்ளும் முன், பட்டியல் சாதி,பிற்பட்ட சாதி என்ற பாகுபாடு, தலித் அடையாளம் என்பவற்றை குறித்து தெரிந்து கொள்ளுதல் அவசியம். பிற்பட்ட வகுப்பில் இருக்கும் தலித்தும் உண்டு, பட்டியல் சாதியில் இருந்தும் தலித்தல்லாதோரும் உண்டு.

தீண்டாமை,காணாமை போன்ற வேதகால சமூக கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டோர் அனைவரும் தலித்தே, இன்று பிற்பட்ட வகுப்பில் உலாவரும் நால்வருணத்தார் தீண்டாத,காணாத அனைவரும் தலித்துக்களே. அது போல, இன்று பட்டியல் பழங்குடியினராக சமூக,பொருளாதார ரீதியில் தாழ்த்தப்பட்டோருக்கான சலுகை அனுபவித்துவரும் உத்தரகாண்ட் மாநில ராஜபுத்திரர்கள் எக்காலத்திலும் தலித்துகள் அல்ல.
கோலி என்பவர்கள் யார்?
சமஸ்க்ரித மயமாக்கலின் ஆரிய அடையாளம் தேடிக்கொள்ளும் இன்றைய பிற்பட்ட சாதிகளில் ஒன்று தான் இந்த கோலி. மறவர், அகமுடையார், வன்னியர், நாடார், முத்தரயர், போன்ற தமிழ் நாட்டு சாதிகளை ஒத்த சமூக,பொருளாதார நிலையையும், தொழில் மற்றும் வரலாற்று பின்புலமும் கொண்டவர்கள் இவர்கள்.
வடஇந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவியுள்ள இவர்கள், குஜராத்தில் மீனவர்களாகவும், சில மாநிலங்களில் நெசவாளர்களாகவும்,விவசாயிகளாகவும் இருந்திருக்கிறார்கள். சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவின் பல சமஸ்தானங்களை ஆண்டிருக்கிறார்கள்,போர் குடிகளாகவும் இருந்திருக்கிறார்கள். போர்குடியாக இருந்தமையால் ராஜபுத்ரர்களுடன் கலப்பு திருமணங்களும் செய்துள்ளார்கள்,பட்டேல்களுக்கு இணையான நிலவுடைமை சமூகமாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் தங்களை பல சிறுசாதிகளை உள்ளடக்கிய இனக்குழுமமாகவே பார்க்கிறார்கள்.

 

ராஜபுத்திரர்களை போலவே சத்திரிய பட்டம் கட்டிக்கொண்டாலும்,இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் தங்களை இணைத்துக்கொண்டனர்.பல இடங்களில், பிராமணர்,பட்டேல்,ராஜபுத்ரர்களை விட கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கி இருப்பதால், பட்டியல் வகுப்பிலும் சேர்த்துக்கொள்ள கோரினார்கள்.
இந்த கோலி சமூகத்தினர், 2001 சென்செக்ஸ் படி, தில்லி,மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பட்டியல் சாதியாகவும், ஒரு சில கிளைச்சாதியினர் பட்டியல் பழங்குடி வகுப்பில் இருந்தாலும்,ஏனையோர் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் தான் உள்ளார்கள்.
15-ஆம் நூற்றாண்டில் பார்ப்பனர் மற்றும் உயர்சாதியினரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றிய போர்த்துகீசியர்கள் இவர்களையும் மதமாற்றியதாக 1967இல் வெளியான பேப்டிஸ்ட்டா என்ற நூல் சொல்கிறது.இப்போது பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளராகியிருக்கும் ராம்நாத் கோவிந்த் பிறந்த கான்பூரில் கோலி சாதியினர் பிற்படுத்தப்பட்டவர்களாகவே உள்ளார்கள்.ராம்நாத் கோவிந்த் குஜராத்தின் ஓ.பி.சி பிரிவைச் சார்ந்தவர். கோலிகள் அங்கே அப்படித்தான் அழைக்கப்படுகிறார்கள்.மேற்படி திராவிட சாதியான கோலி, தலித் சாதியா இல்லையா என்பதை உங்கள் கணிப்புக்கே விட்டுவிடுகிறோம்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*