’நீட் தேர்வு முடிவுகள்’ தமிழகத்தில் ஒருவர் கூட தேர்வாகவில்லை!

மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு இருந்தது. இந்த எதிர்ப்பை பொருட் படுத்தாத மத்தியில் ஆளும் பாஜக அரசு நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்தியது. இதில் 11.38 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினார்கள்.
இத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் தொடர்பாக கடும் சர்ச்சைகள் எழுந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றம் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்தது. அந்த தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து தேர்வு முடிவுகளை 26-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உத்தரவும் பிறப்பித்தது.
இந்நிலையில் நீட் தேர்வில் தேர்வான முதல் 25 பேரின் பட்டியல் வெளியானது அதில் ஒருவர் கூட தமிழகத்தைச் சார்ந்தவர் இல்லை. இது தமிழக பெற்றோர்களையும் சமூக நலன் சார்ந்து இயங்குபவர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் பிளஸ் ஓன், பிளஸ் டூ பாடங்களில் இருந்துதான் கேள்வி கேட்கப்பட்டதாம். தமிழகத்தில் பிளஸ் ஓன் பாடத்தையே பல தனியார் பள்ளிகள் நடத்துவதில்லை. அது போல ஒன்பதாம் வகுப்பு பாடத்தையும் நடத்துவதில்லை. 9-ஆம் வகுப்பில் இருந்தே பத்தாம் வகுப்பு பாடத்தையும், பிளஸ் ஓன் வகுப்பிலேயே பிளஸ் டூ பாடத்தையும் நடத்துவதால் பிளஸ் ஓன் பாடத்தை படிக்காமலேயே பள்ளிக்காலத்தை தனியார் பள்ளி மாணவர்கள் முடித்து விடுகின்றனர்.
இந்த ஆண்டில் இருந்துதான் பிளஸ் ஓன் பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டிருப்பதால் அடுத்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் தேர்வாகலாம் என்று கூறப்படுகிறது. தவிறவும் பாரபட்சமான கல்வியும், ஏழைகளுக்கு மறுக்கப்படும் கல்விச் சூழலும் இருக்கும் நிலையில் நீட் என்பது பாரபட்சமான தேர்வாகவே உள்ளது.
இன்னொரு பக்கம் பிளஸ் ஓன் படிப்பிற்கும் பொதுத் தேர்வை கொண்டு வந்த தமிழக கல்வித்துறையை அனைவரும் பாராட்டிய நிலையில் இப்போது ஒரு உண்மை தெரிய வருகிறது. நீட் தேர்வை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு அதற்கு உதவும் வகையில்தான் பிளஸ் ஓன் வகுப்பிலும் பொதுத் தேர்வை அறிமுகம் செய்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*