பாஜக ஆதரவு : மத ரீதியாக பிளவு பட்ட அதிமுக!

சசிகலாவின் ஆதரவுடன் பாஜக வேட்பாளாராக போட்டியிடும் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுகவின் அனைத்து அணிகளும் ஆதரவு தெரிவித்தன. இதில் தினகரன் அணியினரும் ஆதரவு தெரிவித்தாலும் அவர்கள் எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை மீது கடும் கோபத்தில் உள்ளார்கள். இந்நிலையில் வெளிப்படையாகவே பாஜகவை அதிமுக ஆதரித்துள்ளதால் இது அக்கட்சியில் உள்ள சிறுபான்மை மக்கள், தலித்துக்களை கொதிப்படைய வைத்துள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசு விட்டு தப்பியோடி விட்டனர். அமைச்சர் கலந்து கொள்ளும் இஃப்தார் விருந்து  விளபரப்பலகையும் கிழித்தெறியப்பட்டுள்ளது.
திண்டுக்கல் பேகம்பூர் பங்களா மேட்டைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில்  இவர் 38-வது வார்டு முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலராக இருந்தார். தற்போது 38-வது வார்டு அ.தி.மு.க. செயலாளராக உள்ளார். இவரது வீட்டில் இன்று அதிகாலை 2 மணியளவில் பலத்த சத்தத்துடன் குண்டு  வெடித்தது. பெட்ரொல் நிரப்பப்பட்ட குண்டை யாரோ வீசி விட்டுச் சென்றிருக்கிறார்கள். மத்திய அரசுக்கு ஆதரவாக அதிமுகவினர் செயல் பட்டு வருவதால் கோபமடைந்த ஒரு பிரிவினர் இந்த பெட்ரோல் குண்டை வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

அது போல  திண்டுக்கல் பேகம்பூர் பள்ளிவாசலில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொள்ளும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கான விளம்பரப் பலகையும் கிழித்தெறியப்பட்டுள்ளது. இந்த இரு சம்பவங்களாலும் அங்கு பரபரப்பு நிலவும் நிலையில் ஏராளமான  போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளார்கள். திண்டுக்கல் சீனிவாசனை அழைத்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த முஸ்லீம்கள் சொந்த சமூகத்திற்கு அஞ்சி பின்வாங்கும் சூழலில் அதிமுகவின் பாஜக ஆதரவு மத ரீதியான பிளவை அக்கட்சிக்குள் உருவாக்கியிருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*