மகாராஷ்டிராவில் 6 மாதங்களில் 1,129 விவசாயிகள் தற்கொலை!

விவசாயிகளின் கடனுதவியைத் தள்ளுபடி செய்யக் கோரி மனுக்கள் இழுபடி நிலையில் இருக்கும் தருவாயில், விவசாய அமைப்புகள் தங்கள் போராட்டதைத் தொடங்குவதற்கு தயாராகிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், மகாராஷ்டிராவில் கடந்த மே மாதம் மட்டும் 243 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஜனவரியில் இருந்து மே மாதம் வரை, சுமார் 1,129 விவசாயிகள் தற்கொலை மேற்கொண்டுள்ளனர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
 
மகாராஷ்டிராவின் மத்தியிலிருக்கும் ஒஸ்மானபாத், மராத்வாடா, விதர்பாவ் மற்றும் யாவத்மால் ஆகிய இடங்களில் தான் அதிகபட்சமான தற்கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த வருடத்தில் மட்டும், அமராவதியில் 426 விவசாயிகளும் ஔரங்காபாத்தில் 380 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர். இந்த 6 மாதங்களின் எண்ணிக்கையை கடந்த ஆண்டின் ஆறு மாதங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் எண்ணிக்கை சற்றளவு குறைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். விவசாயக் கடன் தள்ளுபடி சில மாதங்களில் மத்திய அரசாங்கத்தால் நடைமுறைபடுத்தப்பட்டால், இந்த தற்கொலை சம்பவங்கள் குறையும் என விவசாயத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
2008-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ததுடன், விவசாயிகளுக்கு நிவாரணமும் அளிக்க முன்வந்தது. இதனால், விவசாயிகளின் தற்கொலை விகிதம் உடனடியாகக் குறைந்தது. இந்த நடவடிக்கையைத்தான், தற்பொழுதும் இந்த அரசாங்கம் கையாளவுள்ளது என்று ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார். இருப்பினும், அரசாங்கத்தின் இந்த கடன் தள்ளுபடி நடவடிக்கை தற்கொலை விகிதத்தை குறைக்க உதவாது என சில சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சாகர்ஷ் யாத்ரா எனும் இடத்தில் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்தும், அரசியல்வாதிகள் மீது துளி அளவு கூட நம்பிக்கை இல்லாத விவசாயிகள், சிறந்த தீர்வான முடிவை கொண்டுவர எண்ணி தற்கொலையை மேற்கொண்டு வருகின்றனர். மேற்கு மகாராஷ்டிராவில், கடன் தள்ளுபடிக்காக போராடும் விவசாயிகளின் போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
உண்மையில் மத்திய அரசாங்கம்  விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கையை குறைக்க நினைத்தால், விவசாயிகளுக்கு மாதாந்த நிதி உதவி வழங்கியிருக்கும் என மராத்வாடவைச் சேர்ந்த விவசாய ஆர்வலர் அமர் ஹபீப் கூறியுள்ளார்.அக்டோபர் மாதத்திற்குள், மகாராஷ்டிரா விவசாயிகளின் கடனுதவி தள்ளுபடி செய்யப்படும் என ஃபட்னவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால், மகாராஷ்டிராவில் இருக்கும் 30 லட்ச விவசாயிகளுக்கு 33,000 கோடி நஷ்டஈடு வழங்கப்படும்.
 
இந்தியாவில், 2016-ம் ஆண்டு மட்டும் 3,063 விவசாயிகள் வறட்சி, பருவமழையின்மை மற்றும் கடன் ஆகியவற்றால் இறந்துள்ளனர். விவசாய உற்பத்திகளின் வீழ்ச்சியடையும் விலைகளும், கடன்களும் விவசாயிகளை அதிக வறுமைக்குள் தள்ளுகின்றது. விவசாயிகளின் இந்த நிலைமைக்கு அரசாங்கத்தின் நோக்கமற்ற கொள்கைகள் தான் காரணம் என சமூக மற்றும் விவசாய வல்லுனர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*