மெர்க்குரி: கமல்ஹாசன் வழியில் கார்த்திக் சுப்பராஜ்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தை மௌன மொழியில் இயக்க முடிவு செய்திருக்கிறார். 1987ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மௌன திரைப்படம் ‘புஷ்பக விமானா’ (அ) ‘பேசும் படம்’. இந்த படத்தை இயக்கியவர் சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ். தொழில்நுட்ப வளர்ச்சி இருந்த போதிலும் புது முயற்சியாக இந்த திரைப்படத்தை எடுத்தார்கள். அதன்பிறகு இதுபோன்ற வித்தியாசமான முயற்சியை யாரும் செய்யவில்லை.

இந்நிலையில் கார்த்திக், பிரபுதேவாவை வைத்து இயக்கவுள்ள ‘மெர்க்குரி’ என்ற திரைப்படத்தை மௌன மொழியில் இயக்கவுள்ளார். இதில் பிரபுதேவா முதன்முதலாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ‘ஜில் ஜங் ஜக்’ சனத் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். கல்லூரி மாணர்வகளை சுற்றி நடக்கும் த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாகவுள்ளது என கார்த்திக் தெரிவித்துள்ளார். ஸ்டோன் பென்ஞ் ஃபிலிம்ஸ் அண்ட் ஒரிஜினல்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதுபற்றிய முழு விபரங்களும் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*