திண்டுக்கல் சீனிவாசனின் இஃப்தார் நிகழ்வை புறக்கணித்த முஸ்லீம்கள்!

குடியரசுத் தலைவர் தேர்தல் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கும் முடிவை எடுத்தமையால் அதிமுகவை முஸ்லீம்கள் புறக்க்ணித்துள்ளார்கள் இது நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் வெளிப்பட்டது இதை நாம் செய்தியாக பதிவும் செய்திருந்தோம்.

(வாசிக்கவும்:- பாஜக ஆதரவு : மத ரீதியாக பிளவு பட்ட அதிமுக!)

தமிழக அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் திண்டுக்கல் பேகம்பூர் பள்ளிவாசலில் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு பிரிவினர் அதிமுக கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். அத்தோடு திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கான விளம்பர தட்டிகளையும் கிழித்தெறிந்தனர். ஆனால் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை போலீஸ் உதவியுடன் திண்டுக்கல் சீனிவாசன் நடத்தினார்.
கிழிக்கப்பட்ட பேனர்கள் மீண்டும் வைக்கப்பட்டது. பெருமளவு இருக்கைகளும் போடப்பட்டன. மேடையில் போலீஸ் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் மேடையையில் குவிந்திருக்க 99% இருக்கைகள் நோன்பு திறப்புக்கு வர வேண்டிய முஸ்லீம் மக்கள் வரவில்லை. பெருமளவு சேர்கள் காலியாக கிடந்ததால். அருகில் இருந்த மக்களை காசு கொடுத்தும் , பிரியாணி போடுகிறோம் என்று அவசரத்துக்கு அழைத்து வந்து அமர வைத்தார்கள். ஆனாலும் சேர்கள் நிரம்பவில்லை.
பின்னர் மேடையை நிரப்பியிருந்த குட்டி தலைவர்களையே சேரில் போய் உட்காருங்கள் என்று அமைச்சரே அனுப்பியும் வைத்தார். எதுவும் எடுபடாத நிலையில் சேர்களையே பார்த்துக் கொண்டிருந்த சீனிவாசனுக்கு போரடித்ததால் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பூச்சிநாயக்கன் பட்டியில் நோன்பு நிகழ்ச்சிக்குச் சென்றார் அங்கும் இஸ்லாமிய மக்கள் எவரும் வரவில்லை.
ஆனால் ஏழை இந்துக்களை அழைத்து வந்து நோன்பு நிகழ்ச்சியை நடத்தினார்கள். பாஜக வேட்பாளரை அதிமுக ஆதரித்ததால் ஜமாத்துகளும் முஸ்லீம் பிரமுகர்களும் திண்டுக்கல் சீனிவாசன் நிகழ்ச்சியில் இஸ்லாமிய மக்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று கூறியிருந்ததாலும். முஸ்லீம் மக்களிடையே அதிமுக மீது வெறுப்பு எழுந்துள்ளதாலும் எவரும் செல்லவில்லை. இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது.
அதிமுகவின் சிறுபான்மைப் பிரிவு தலைவர் அன்வர்ராஜாவுக்கு எழுந்துள்ள சிக்கல்தான். அவரால் சொந்த சமூகத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறார். இச்சூழலில் தங்களின் நிலை குறித்து பூச்சி நாயக்கன் பட்டியில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்:-
“ நாங்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவை ஆதரித்ததால் சில இளைஞர்கள் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகிறார்கள். புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சிங்கம் போல தனித்து நின்றார்கள். வென்று காட்டினார்கள். இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுகவை ஆக்கினார்கள். ஆனால் அம்மா இறந்த பிறகு அந்த துணிச்சலோ தெளிவோ எங்களைப் போன்றவர்களுக்கு இல்லை. என்பதால் வேறு வழியின்று பாஜகவை ஆதரித்தோம்” என்றார்.
பாஜக வேட்பாளரை அதிமுக ஆதரிக்க என்ன காரணம் என்பதை அமைச்சர் போட்டுடைத்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*