மராட்டியம்;கடன் தள்ளுபடி ஏற்க மறுத்த விவசாயிகள்!

நாடு முழுக்க நிலவும் வறட்சி காரணமாக விவசாயிகள் கடன் தள்ளுபடி கோரி போராடி வருகிறார்கள். மத்தியபிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் இப்போராட்டம் பெரிய அளவில் வெடித்திருக்கும் நிலையில் ராஜஸ்தானில் இப்போராட்டம் வெடித்து விடாமல் தடுக்க ஜாட்களின் இட ஒதுக்கீடு போராட்டம் தூண்டி விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிர அரசு  விவசாயிகளின் பயிர்க் கடன் தொகையில் 34 ஆயிரம் கோடி ரூபாய்க்கான கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பயிர் கடன்கள் தள்ளுபடியாகும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று அறிவித்தார்.

ஆனால் இந்த கடன் தள்ளுபடியை விவசாயிகள் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள். இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், ’’அரசு அறிவித்துள்ள திட்டத்தின்படி ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய்தான் கிடைக்கும். ஆனால் வங்கியில் அதற்குமேல் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு இதனால் எந்த பலனும் இல்லை. எனவே இந்த திட்டத்தை எங்களால் ஏற்கமுடியாது.

இதுதொடர்பாக ஜூலை 9-ம்தேதி நாசிக்கில் நடக்கவுள்ள ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. அதைதொடர்ந்து, மாநில அரசை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்த உள்ளோம்.

எங்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால், ஜூலை 26-ம்தேதி மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்’’ என தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*