#Big boss- ஒரு மெல்லிய பார்வை: வெண்பா கீதாயன்

கிட்டத்தட்ட 1990களின் இறுதியில் 2000 ஆவது ஆண்டு தொடக்கத்தில் மேற்கத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் Big brother என்கிற ரியாலிட்டி ஷோ ஜான் டி மோல் (John de Mol) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்கா, கனடா என பல நாடுகளில் பல சேனல்களில் ஒளிபரப்பப்பட்டாலும் ப்ரிட்டிஷ் சேனலான channel4 &5 நடத்தும் Celebrity big brother show series அதிக சர்ச்சைக்குள்ளாகி பிரபலமானது. 2007ஆம் ஆண்டு இதன் ஒரு seasonஇல் நம் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும் பங்கேற்று housemateஆக இருந்து சக housemate இவரை இனவெறி (racism) சார்ந்த வசைகளுக்கு உட்படுத்தி நிகழ்ச்சி மீது சர்ச்சைகளும் விமர்சனங்களும் குவிய ஒருவழியாக அந்த season-இல் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். பிறகு ஹிந்தியில் ஒரு Bigboss seasonக்கு hostஆகவும் வந்தார்.

Colours டிவியில் கடைசி இரண்டு seasonஐ சல்மான்கான் தொகுத்து வழங்கினார். Colours டிவி கன்னடாவிலும் சுதீப் நான்கு seasonகளை முடித்துள்ளார். ஒரு மாதமாக தமிழில் விஜய் டிவியிலிருந்து ஒரு திடீர் விளம்பரம் ஒளிபரப்பட்டது. அது Bigboss நிகழ்ச்சி என்பதை விட கமல்ஹாஸன் சின்னத்திரையில் என்கிற செய்தியினால் அதிக பரபரப்பு ஏற்பட்டது. உண்மையில் Bigboss என்கிற reality gameshow குறித்து தமிழ்நாட்டின் கடைக்கோடி மெகாத்தொடர் ரசிகனுக்குத் தெரியவில்லை. இது எதுவும் சீரியலா? அல்லது குறும்படம் எதுவுமா? ஏதேனும் நிகழ்ச்சிக்கு உலகநாயகன் ஜட்ஜாக வருகிறாரா? போன்ற கேள்விகள் வெகுஜன ரசிகர்களிடமிருந்து எழுந்தன.

பிறகு ஒருவழியாக பதினான்கு பேரை வைத்துக்கொண்டு நடத்தும் reality show என்பது அவர்களது மூளைக்குள் திணிக்கப்பட்டது. நிகழ்ச்சி என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும்; ரொம்ப நாளுக்குப் பிறகு உலகநாயகனை screenஇல் பார்க்கப் போகின்றோம் என்கிற ஆவல் நாளுக்குநாள் கூடியது. இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஏற்கெனவே அறிந்தவர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

போட்டியாளர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் ப்ரைவசியைத் திருடுபவை. அந்தரங்கங்களைப் படம்பிடித்து TRP ratingக்கு பயன்படுத்தப்போகின்றனர். ஏற்கெனவே கமல் கலாச்சார சீர்கேட்டுக்கு வழி ஏற்படுத்துபவர். இந்த show மற்ற மொழிகளில் போட்டியாளர்களின் romanceஐப் படம்பிடித்துப் போட்டுக்காட்டின. ஆக கமல்ஹாஸன் தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகின்றார். மேலும் இந்நிகழ்ச்சி போட்டியாளர்களுக்குள் சண்டை, வன்மம் போன்ற கெட்ட குணங்களை உருவாக்கும். இதுமாதிரி பல விமர்சனங்கள் சோஷியல் நெட்வொர்க்களில் சுற்றி வந்தன. இருப்பினும் அந்த பதினான்கு பேர் யார் என்பதில் அனைவருக்கும் ஒரு திருட்டுத்தனமான ஆர்வம் இருந்தது.

இப்போது அறிமுக நிகழ்ச்சி பற்றி பேசுவோம். கமல் தான் நடிக்கவில்லை என்பதை வலுவான நடிப்பின்மூலம் வேண்டுமென்றே வெளிப்படுத்தியது போல தொகுத்து வழங்கினார். Script தரவில்லை என்கின்ற காட்சிகளுக்கு அத்தனை தடுமாற்றம் தேவைதானா? அல்லது அதீத camera senseஇனால் அவ்வளவு நடிப்பா? இயல்பாக இருப்பதைப் போல கமல் நடிப்பது அனைவருக்குமே தெரிகின்றது. அதற்கு இயல்பாக நடித்திருக்கலாம். Timingஇல் அடிக்கின்ற jokes மிகக்குறைவு. கமல்ஹாஸனுக்கும் ஏதும் conditions போட்டிருக்கின்றனரா என்று தெரியவில்லை. போட்டியாளர்களுக்கும் சேர்த்து பதற்றத்திற்கு உள்ளானது போல கமல் நடித்துக்கொண்டிருக்கின்றார்.

அடுத்து contestantsஐ நோக்கி வருவோம். சில விஜய் டிவி வார்ப்புகளும் சில புதிய வார்ப்புகளும் celebrity contestantsஆக வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். கஞ்சா கருப்பு, பரணி இருவரையும் அவமானப்படுத்தி காயத்ரி ரகுராமிற்கும் ஜல்லிக்கட்டு ஜூலிக்கும் சண்டையிழுத்துவிட்டு ஓவியாவிற்கும் ஆரர்க்கும் இடையே சில்மிஷம் ஏற்படுத்தி நமிதாவையும் ஆர்த்தியையும் கேலிக்குள்ளாக்கி TRPயை ஏற்றும் வேலையை விஜய் டிவி செய்யாமல் இருக்கவேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். மேலும் இந்த script சார்ந்த கூத்துகளை தொகுத்து வழங்கும் தர்மசங்கடமான சூழல் கமல்ஹாஸனுக்கும் வந்துவிடக்கூடாது.

காயத்ரி ரகுராம் உள்ளே சென்ற பிறகு எப்படி tweet போட முடிந்தது? ஜூலி வெளியே உழைப்பாளிகளின் வியர்வை துடைத்த தலைப்பாகை என்று சொல்லிவிட்டு உள்ளே ஆர்த்தியிடம் ஸ்டைல் என்று உண்மை விளம்பியதை நான் கவனிக்கவில்லை. தமிழில் Bigboss கமலை மட்டும் பிரதானமாக சுவாரசிய பொருளாகக் காட்டினால் சீக்கிரம் கட்டிய setஐ அவிழ்க்க நேரிடும்.

வெண்பா கீதாயன்- எழுத்தாளர்

 

3 Comments

  1. இந்த program இயல்பாக இல்லை என்பது அறிமுக season தெரிகிறது.

1 Trackback / Pingback

  1. உடுமலை கவுசல்யாவும் மெரினா ஜூலியும்!

Leave a Reply

Your email address will not be published.


*