டிஜிட்டல் வாசி : ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டீங்களா ப்ரெண்ச்?

ரம்ஜான் அப்படின்னா என்னனு நம்ம பசங்கள்ட்ட கேட்டா உடனே பிரியாணி சாப்புட்றது அப்படின்னு தான் பதில் வரும்… இத்தனை நாள் கஷ்டப்பட்டு நோன்பு வச்சு பிறை பாத்து கொண்டாடுறதுலாம் எப்பவும் ஞாபகத்துக்கு வராது… ரம்ஜான் அன்னிக்கு நம்ம இஸ்லாமிய நண்பர்கள் வீட்ல பிரியாணி செஞ்சு பக்கத்துல இருக்க நண்பர்கள் வீடுகளுக்கு கொடுப்பாங்க… இந்த மாதிரியான விஷயங்கள் தான் மத உணர்வுகளை தாண்டி சகோதரத்துவத்தை வழக்குது…

அப்படி இன்னிக்கு எத்தனை பேருக்கு பிரியாணி கிடைச்சிருக்கு… எத்தனை பேருக்கு வெறும் தயிர் சாதம் மட்டும் கிடைச்சிருக்குனு வாங்க பாப்போம்…

@Sathiya Kumar S
” எங்களுக்கு பிரியாணி வந்துட்டேனு”ஒரே போட்டோவ நாலுதடவ நியூஸ்பிடுல பாத்துட்டேன்… கூகுள்ல டவுன்லோட் பண்ணிருப்பானுவ போல…. கெடக்கலீனா கெடக்கலனு சொல்லுங்கையா…….இந்த வெட்டி கௌரவத்துக்கு…..

@Herald Saravana
ஹோட்டல்ல பார்சல் பிரியாணி வாங்கிட்டு தட்டுல கவுத்தி போட்டோ பிடிச்சு போடுறீங்களே வெக்கமா இல்ல…

@Shylendar Ditto
என்னடா இது பஞ்சத்துல அடிப்பட்டவன் மாதிரி யாராச்சும் பிரியாணி போடுவிங்களா.. கொடுப்பிங்களானு கேட்டுட்டு.. கிடைச்ச பிரியாணிய ஃபோட்டோ வேற எடுத்து போட்டுட்டு இருக்கிங்க… ஒரு மதத்தோட பண்டிகைய ஒட்டுமொத்தமா பிரியாணிக்காக மட்டும்னு மாத்தி வெச்சிருக்கானுங்க.. 😮 யாஹ்..அல்லாஹ்…

@Manoj B
மட்டன் பிரியாணி, முட்டை, கேசரி சாப்பிட முடியாம பாதி வச்சிட்டேன் வேற. கொஞ்ச நேரம் கழிச்சு மூக்கு அரிச்சுதுனு மூக்குல கை வச்சேன்.
அடடடடா என்ன ஒரு வாசனை… மட்டன் பிரியாணியை மறுபடியும் சாப்ட மாதிரியிருக்கு…
அதனால இப்ப 5 நிமிசத்துக்கு ஒரு தபா மூக்குக்கிட்ட கை தானா போயிருது…

@Saravana Ganesh
வாழ்க்கைல பிரியாணியவே கண்ணுல பாத்ததில்லாதமாதிரி
“பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…பிரியாணி…”ன்னு
இன்னிக்கு போஸ்ட்போடும் ஆட்களால்தான் India/Tamilnadu, sarcastically challengedடாவும் ரஜினி – அரசியலுக்கு வரலாமா வேணாமா டைப் விவாதங்களும் நடந்துகிட்டிருக்கு.
C’mon Kids.

@எஸ். சரத்குமார்
அடேய் நீங்கள்ளாம் பிரியாணி பிரியாணின்னு ஸ்டேடஸ் போட்டு, உயரதிகாருக்கு
Happy ramzan ன்னு மெசேஜ் அனுப்புறதுக்கு பதிலா Happy briyani ன்னு மெசேஜ் பண்ணிட்டேன்டா ????????

@Thippu Sulthan K
போனுல கேமரா இல்லாதது. அப்புடியே மனச போட்டு பெசயிது….
இந்த தொட கறி இருக்குல்ல ..அத அப்புடியே மெளகு பொடி போட்டு வறுத்து…

@தோணி கௌதம்
வாழ்க்கைல சாதிக்கனும்னு வெறி வரப்பதான் பசியும் சேந்து வந்துடுது!
சரி சாப்டு வந்து சாதிச்சுக்கலாம்னு பார்த்தா சாப்டதும் தூக்கம் வந்துடுது??

@Manikandan Raja N
தான் தீவாளிக்கும் பொங்கலுக்கும் அவனுக்கு ஒரு உளுந்தவடை கூட கொடுக்கவில்லையே என்பதை உணர்ந்த கசகசா பிரியாணி கனவை கலைத்துவிட்டு முள்ளங்கி சாம்பாரை மூக்கை மூடிக்கொண்டு சாப்பிட துவங்கினான் #பிரியாணி_பிரயாசைகள்

@Nithya Jana
“பிகர் முக்கியமா பீஸ் முக்கியமா… ”
பீஸ் தான் முக்கியம் க்ரூப்ஸ் புரியாணி மொக்குட்டோங்குற தலக்கனத்துல ஸ்டேட்டஸ்ஸா போடுதுங்க… ??
என்ன ஓசி பிரியாணி தான… அதுக்கு ஏன் சோத்தாங்கைல திண்ணா பீச்சாங்கை மணக்குதுன்னு போஸ்ட்… ???
தட் தண்ணீரில் இருக்கின்ற மீன் கருவாடு ஆகலாம், கருவாடு மீனாக முடியாது மொமெண்ட்கள்….
நான் அழல… கண்ணு வேர்க்குது…

@Arun Pandiyan
வந்ததை வரவில் வைப்போம் ….
சென்றதை செலவில் வைப்போம்….
இன்னும் பிரியாணி வரல… தீபாவளிக்கு இந்தப் பக்கம் வா… வெடிய பத்தவச்சு வேட்டிக்குள்ள போடுறேன்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*