நடிகர் எஸ்.வி.சேகருக்கு சுப.வீயின் திறந்த மடல்!

 

திரு எஸ்.வி.சேகர் அவர்களுக்கு,

வணக்கம். நேற்று வெளியான உங்களின் 11 நிமிடக்காணொளியைக் கண்டேன். அதுகுறித்துச் சில செய்திகளை உங்களோடுபேசுவதற்காகவே இந்த மடல். ஊர் அறிய வேண்டும் என்பதற்காகஇதனைத் திறந்த மடலாக வெளியிடுகின்றேன்.

நியூஸ் 7 தொலைக்காட்சியில் நண்பர்கள் நாராயணன், மதிமாறன்இருவருக்குமிடையே சில நாள்களுக்கு முன் நடைபெற்ற உரையாடலின்அடிப்படையில் உங்கள் காணொளி அமைந்துள்ளது. அந்ததொலைக்காட்சி நிகழ்வை நானும் பார்த்தேன்.

1. நீங்களும் நானும் அடிப்படையில் முற்றிலும் நேர் எதிரானகொள்கைகளைக் கொண்டவர்கள் என்பது வெளிப்படை. மீண்டும் அதனைஉங்கள் காணொளி உறுதிப்படுத்தியுள்ளது. “சாதியும் மதமும் நமக்குத் தாய்,தந்தை போல” என்று கூறியுள்ளதோடு, “ஒவ்வொருத்தரும் தங்கள் சாதியைஒசத்திப் பேசுங்க. அதிலே தப்பில்ல” என்றும் நீங்கள் காணொளியில்குறிப்பிட்டுள்ளீர்கள். எங்களை இழிவுபடுத்தும் சாதி உங்களுக்குத் தாய்போலத் தெரிகிறது. சாதி தாய் என்றால், ‘சாதிகள் இல்லையடி பாப்பா என்றுசொன்ன பாரதி பற்றிய உங்கள் பார்வை என்ன? சாதியைக்காப்பாறுவதுதான் உங்கள் நோக்கம் என்பதை நாங்கள் அறிவோம். சாதிஅமைப்பு இருந்தால்தானே, சிலர் மேலும், பலர் கீழுமாக இந்தச் சமூகத்தில்வாழ முடியும்! ஆனால் சாதியை ஒழிக்க வேண்டும் என்பதுதான்எங்களின் நோக்கம். எனவே நாம் இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்கவாய்ப்பே இல்லை.

2. “எந்தப் பார்ப்பனர் மீதாவது ஒரு எப்.ஐ.ஆர். உள்ளதா என்றுகேட்கிறீர்கள். இந்திய ராணுவ ரகசியங்களை வெளிநாட்டிற்கு விற்ற கூமர்நாராயணன் யார் சேகர்? அது பழைய கதை என்பீர்கள். சங்கரராமன்கொலைவழக்கில் ஒரு பார்ப்பனர் மீதன்று, பல பார்ப்பனர்கள் மீதுஎப்.ஐ.ஆர். போடப்பட்டதே? வழக்கும் நடந்ததே. அவர்கள்விடுதலையாகி விட்டனர் என்பீர்கள்!

ஜெயலலிதா மீது வழக்குத் தொடுக்கப்பட்டு, உச்ச நீதிமன்றம்தண்டனையும் வழங்கியுள்ளதே, அது கூடவா உங்களுக்கு மறந்துபோய்விட்டது?

3. 99.9% மதிப்பெண் வாங்கினால் கூட, பார்ப்பனமாணவர்களுக்கு, படிப்பதற்கு இடம் கிடைப்பதில்லை என்றுகூறியுள்ளீர்கள். அப்படியானால், இன்று பள்ளி, கல்லூரிகளில் படித்துக்கொண்டுள்ள பார்ப்பன மாணவர்கள் அனைவரும் நூற்றுக்கு நூறுமதிப்பெண் பெற்றவர்களா? பொய்யைக் கூட உங்களால் பொருந்தச் சொல்ல முடியவில்லையே?

4. நண்பர் மதிமாறன், மதியில்லாதவர், குறுக்குப்புத்திக்காரர்என்றெல்லாம் வசைபாடும் நீங்கள், அடுத்தவரை வெறுக்காமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை வேறுகூறுகின்றீர்கள். மதிமாறனின் புத்திக் கூர்மையான வினாக்களுக்கு விடைசொல்ல முடியாமல் தடுமாறிய ‘பிரபலங்களைத்’ தொலைகாட்சிநிகழ்ச்சிகளில் நாங்களும் பார்த்துள்ளோம். அது போகட்டும், அவர்அடுத்த சாதியினரை அசிங்கமாகப் பேசினார், பார்ப்பனர்களைத் திட்டினார்என்று பொத்தாம் பொதுவாகவே கடைசி வரையில் பேசியுள்ளீர்களே தவிர,அப்படி என்ன பேசினார் என்று எந்த இடத்திலும் கூறவே இல்லையே ஏன்?அங்குதான், சான்று இல்லாமல் பழி தூற்றும் உங்கள் தந்திரம் இருக்கிறதுஎன்பதை நாங்கள் அறிவோம்.

அந்த விவாதத்தில் நாராயணன் அவ்வளவு அமைதியாகவாபேசினார்? எவ்வளவு இரைச்சல்! அடுத்தவரைப் பேச விடாமல் தடுக்கின்றஆர்ப்பாட்டம்! யோகா செய்தால் மன அமைதி வரும், நிதானம் வரும்என்றெல்லாம் சொல்கின்றீர்கள், நண்பர் நாராயணன் யோகா செய்வதேஇல்லையா?

அன்று மதிமாறன் என்ன கேட்டார்? யோகா நல்லதுஎன்கின்றீர்களே, சுன்னத் செய்வதும் நல்லது என்றுதான் மருத்துவஅறிவியல் சொல்கிறது. அதற்காக அனைவரும் சுன்னத் செய்து கொள்ளவேண்டும் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டார்.அறிவார்ந்த இந்தக் கேள்வி உங்களைக் கோபப்படுத்தத்தான் செய்யும்.

6. திமுக செயல் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்குநன்றியும், பாராட்டும் சொல்லியுள்ளீர்களே, அங்குதான் உங்களின் மூளைஅபாரமாக வேலை செய்துள்ளது. மக்கள் செல்வாக்கு உள்ள ஒருவரைநேரடியாகப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதில்தான் எத்தனைகவனம்.

ஸ்டாலின் அவர்கள் மீதும் , திராவிட இயக்கத்தின் மீதும்உங்களுக்கெல்லாம் எவ்வளவு அடங்காச் சினம் உண்டு என்பதுஎங்களுக்குத் தெரியாதா? சில நாள்களுக்கு முன்பு கூட, ரஜினி, அஜித்,விஜய் மூவரும் சேர்ந்து கட்சி தொடங்க வேண்டும் என்று பேட்டிகொடுத்தீர்கள், அதன் உட்பொருள் என்ன? என்ன செய்தாவது திமுகஆட்சிக்கு வருவதைத் தடுத்துவிட வேண்டும் என்பதுதானே! செயல்தலைவர் மீது இவ்வளவு கோபத்தை உள்வைத்துக் கொண்டு, வெளியில்நன்றியும், பாராட்டும் சொல்கின்றீர்களே, தேர்ந்த நடிகர்தான் நீங்கள்!

செயல் தலைவர் தளபதி அவர்களையும், ஆசிரியர் வீரமணிஅவர்களையும், என்னையும், தம்பி மதிமாறனையும் வெட்டிப் போட்டுவிட்டால், உங்களின் கோபம் தீர்ந்துவிடுமா? அப்போது கூட எங்களைவெட்டுவதற்கு, அறியாமையிலும், வறுமையிலும் உள்ள எங்கள் சகோதரன் ஒருவனிடம்தான் அரிவாளைக் கொடுத்து விடுவீர்கள். நீங்கள்வெட்டினால், உங்கள் மீது எப்.ஐ.ஆர் வந்துவிடுமே!

இப்போதும் அன்புடன்

சுப. வீரபாண்டியன்

10 Comments

 1. அவர்கள் இன்னும் மாறவில்லை, மாறவும் மாட்டார்கள்.நாம்தான் ஒருங்கிணைய வேண்டும்.

 2. எவரையும் திருப்தி செய்து வாழ முடியாது. ஆனால், அறிவைப் பயன்படுத்துகிறேன் என்கிற வகையில் பிரச்சினைகளை உண்டாக்கி வாழ்வதையே வாழ்க்கையின் லட்சியமாக கொண்டிருப்பதை ஏற்க முடியவில்லை. வாழ்தலைப் புரிந்து வாழ்பவர்கள் அமைதியாக வாழ்ந்து விட்டுப் போய்விடுகிறார்கள். ஒருவருக்கு நியாயம், இன்னொருவருக்கு அநியாயம். சாதியை, மத நம்பிக்கையை, கடவுள் நம்பிக்கையை நீக்கி விட்டால் மனிதன் இருக்க மாட்டான். இதைப் புரிந்து கொள்ள முடியாமல் வியாக்கியானம் பேசும் மடமையை என்னென்று சொல்வது ? வாழ்தலில் இதுவும் ஒரு வகை தான்.

 3. Arumai thozhare uggalaale matume ivaru arputhamaga pathiladi kuduka mudium athuvum yethiravar varthaiyal thalai kuniya vaithir

 4. அப்படி மென்றால் பள்ளிகளில் சாதியை கேட்காமல் சேர்க்க போராட முன்வரவேண்டும் நீ ங்கள் வேலைவாய்ப்பு களில் சாதி கேட்காதே என போராடுங்கள் அடுத்த தலைமுறை சாதியை மறந்து விடும் சாதி இல்லா சமுதாயம் உறுவாகும்

  • சரியான தகவல். இவர்கள் அதைச்சொல்லியே வாழ்பவர்கள் யாரையும் வாழவிடமாட்டார்கள்.

 5. 2000 வருடங்களுக்கு மேலாக இட ஒதுக்கீட்டை அனுபவித்த உங்களுக்கு இப்படி பேச உரிமை இல்லை .

 6. Ask 100 Brahmins to comment on this, all 100 will be in favour or Mr.SV.Seker. When you do the same with 100 non Brahmins , they will be divided in their opinion. They will speak in favour of higher caste opinion thinking that it indicates their higher stature. Tamil community is divided in the names of DMK and AIDMK. High time both parties get United at least for five years to save Tamil culture, Tamils and people of lower caste. Thalakarai, Dinakaran and m. Natarajan can work on this agenda,

  • Sir I agree with u, In Mumbai when all ‘ Bhiharis’ were beaten and one medical student killed(shot) ,think what happened..immedeately Nitish kumarCM of Bhihar went Delhi without ego called Lallu and explained the killings then both came out of parliament with joined hands proclaimed that ‘if anythig happend to Bhiharis hereafter we will show who we are’.).Did you read anything happend against to them?..every day 100s of tamil fishermen are being killed by srilankan navy what Stalin&(Jayalalitha) nowCM doing?.

 7. ஊடக விவாதங்களில் கலந்துக் கொள்ளும் நாராயணன் கே.டி.இராகவன் ஆகியோர் பிற கருத்துக்களை கொண்டோரை எதிர்க்கொள்ளாமல் கூச்சலிடுவதை காணும்போது மிகவும் அசிங்கமாக உள்ளது.
  எதிராளிகளை முட்டாள்களாக கருதிக்கொண்டு பேசுவது தவறானது?

Leave a Reply

Your email address will not be published.


*