கூட்டுப்பாலியல் வன்முறை: இந்து யுவ வாகினி அமைப்பினர் கைது!

Hindu Yuva Vahini vigilante members take part in a rally in the city of Unnao, India, April 5, 2017. Picture taken April 5, 2017. REUTERS/Cathal McNaughton To Match Insight INDIA-POLITICS/RELIGION - RTS12P31

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவிக்கு வந்ததும் இந்து யுவ வாகினி என்ற அமைப்பினரின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்றது. சிறுபான்மை முஸ்லீம்கள் மீதும் இஸ்லாமிய இளம் தம்பதிகள் மீதும் பல்வேறு தாக்குதல்களை தொடுத்த இந்த அமைப்பினரால் இந்து மதத்தைச் சார்ந்த இளம் காதலர்களும் பாதிக்கப்பட்டனர். பண்பாடு ஒழுக்கத்தின் பெயரால் காதலர்களை தாக்கிவந்த இந்த கும்பல் மீது பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்கார புகார் அளித்ததன் பேரில் அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
உத்திரபிரதேசம் கணேஷ் நகர் பகுதியில் அதிக சத்தத்துடன் ஸ்பீக்கர் பயன்படுத்துவது தொடர்பாக இந்து இளைஞர்களுக்கு இடையே மோதல்.இதனை அடுத்து அவினாஷ் தன்னுடைய நண்பர்களை அழைத்துக் கொண்டு தீபக் வீட்டிற்குள் நுழைந்து உள்ளார். அங்கிருந்து பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதோடு ஒரு பெண்ணை கூட்டுப் பாலியல் வன்முறை செய்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் மக்கள் கூடி அவர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைக்க இந்து யுவ வாகினி அமைப்பின் பிராந்திய தலைவர் ஜிதேந்திர சர்மா போலீஸ் நிலையம் சென்று உள்ளனர். பிற யுவ வாகினி அமைப்பினரும் அங்கு கூடினர். போலீஸ் நிலையத்தில் போராட்டம் நடத்தினர். பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் உமேஷ் காதாரியாவும் அங்கு சென்று உள்ளார். காவல் நிலையத்தில் போலீசாரிடம் இந்து யுவ வாகினி அமைப்பினர் மோசமாக நடந்து கொண்டு உள்ளனர். உதவி சப்-இன்ஸ்பெக்டர் அரோராவை பாரதீய ஜனதா தலைவர் உமேஷ் தாக்கி உள்ளார். இது தொடர்பாக அம்மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் இரு எப்.ஐ.ஆர்.களை பதிவு செய்து உள்ளார்.
ஆனால் போலீசார் இந்த மிரட்டல்களுக்கு அஞ்சாமல் பெண்ணின் புகார் மனுவை பெற்று அவினாஷையும் அவரது குழுவினரையும் கைது செய்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*