சயீப் அலிகான் வழியில் ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி நடிப்பில் இந்தியிலும் தமிழிலும் வெளியாகும் படம் மாம். இந்த படத்தை ரவிஉத்யவார் இயக்கி இருக்கிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்ட ஸ்ரீதேவி…

“ ‘மாம்’ படம் தாய்-மகள் சம்பந்தப்பட்ட உணர்வுபூர்வமான கதை. இந்த கதையை கேட்டதுமே நடிக்க சம்மதித்து விட்டேன். தமிழிலும் இந்த படம் வெளியாகிறது. தமிழ் மக்களை எப்போதும் மறக்க மாட்டேன்.

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கும் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அது தற்போது நிறைவேறிவிட்டது. அவர் இசை அமைத்ததன் மூலம் இந்த படத்தின் மதிப்பு மேலும் உயர்ந்து இருக்கிறது. இப்படம் அனைத்து தாய்மார்களுக்கானது.

நாட்டில் பெண்கள் வாழ்வில் இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது. மேலும் என் மகள் நடிகை ஆவதை நான் விரும்பவில்லை. பெற்றோர் என்ற முறையில் அவருக்கு நான் திருமணம் செய்து வைப்பதே மகிழ்ச்சி. என்றாலும் அவள் நடித்து வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சிதான்” என்றார். சமீபத்தில் சயீப் அலிகானும் தனது மகள் சினிமாவில் நடிபதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அவள் நடிக்க விரும்பினால் நான் அதை தடுக்கமாட்டேன் என பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*