ஜி.எஸ்.டி அறிமுக விழாவை புறக்கணிக்கிறது திரிணாமூல் காங்கிரஸ்!

The newly appointed chief minister of eastern Indian state of West Bengal and Trinamool Congress (TMC) Mamata Banerjee addresses her supporters during a rally in Kolkata July 21, 2011. The annual rally was held to commemorate the July 21, 1993 event where 13 political party workers were killed by the police, and also to celebrate their historic win in the recent concluded state elections, TMC leaders said on Thursday. REUTERS/Rupak De Chowdhuri (INDIA - Tags: POLITICS CIVIL UNREST) - RTR2P4H0

ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை  வரி ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலாக இருக்கிறது. அதற்காக ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவு அறிமுக நிகழ்வு பாராளுமன்றத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் பங்கேற்க அனைத்து எம்.பிக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது மத்தியில் ஆளும் பாஜக அரசு. ஆனால் இந்த விழாவை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் மம்தா பேசுகையில், “பண மதிப்பிழக்க நடவடிக்கையைப் போல், ஜி.எஸ்.டி மோடி தலைமையிலான மத்திய அரசின் அடுத்த வரலாற்று பிழை. ஜி.எஸ்.டி-யின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் என்னவென்று கண்காணிக்க 6 மாத காலம் ஆகும். வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களுக்கு போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும்” என்றார்.

முன்னதாக ஜி.எஸ்.டி விழாவை எதிர்க்கட்சிகள் ஒருமித்த கருத்தோடு புறக்கணிக்கும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இருப்பினும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்து இருந்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*