இந்திய அளவில் நம்பர்ஒன் தமிழ்நடிகர் தனுஷ்

2016ஆம் ஆண்டில், இந்திய மக்களால் மிகவும் விரும்பப்பட்ட ஆண் பிரபலங்களின் பட்டியலை டைம்ஸ் ஆஃப் இண்டியா பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில், டாப் 50-ல் ‘மிஸ்டர் வேர்ல்டு 2016’ பட்டம் வென்ற ரோகித் கன்டெல்வால் முதலிடத்தைப் பிடித்துள்ளார். கிரிக்கெட் வீரர் விராட் கோலி, இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். முதல் 50 இடங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர்களில் தனுஷ் மட்டுமே 26வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆனால், தெலுங்கு நடிகர்களில் மகேஷ் பாபு 7வது இடத்தையும், பிரபாஸ் 22வது இடத்தையும், ராணா டகுபதி 24வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அதேபோல், மலையாள நடிகர்களான துல்கர் சல்மான் 14வது இடத்தையும், நிவின் பாலி 28வது இடத்தையும் பிடித்துள்ளனர். கன்னட நடிகர் சுதீப், 43வது இடத்தைப் பிடித்துள்ளார். 50க்குப் பிறகு உள்ள பட்டியலில், வரிசையாக அஜித், ஆர்யா,விஜய், மாதவன், சித்தார்த், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் இடம்பிடித்துள்ளனர்.

தமிழகத்தை தாண்டி இந்திய அளவில் கூட அஜித் மற்றும் விஜயால் ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை. அவர்களைத் தாண்டி இளம் நடிகர்கள் வேகமாக வளர்ந்து வருகிறார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*