ரஜினியின் அமெரிக்க பயணம்: பின்னணி என்ன?

‘காலா’ படத்தின் மும்பை படப்பிடிப்பு வேலைகளை முடித்த ரஜினிகாந்த், மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று ரஜினி மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அமெரிக்கா சென்றிருக்கிறார்கள். இரண்டு நாள் தொடர் படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில், வழக்கமான சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. மற்றபடி அவரது உடல்நலத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரஜினி சில காலமாகவே தொடர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். இந்த பிரச்சனை காரணமாகவே அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

கலா படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்ற நிகழ்வு அவராகவே திட்டமிடவில்லை. அவருக்கு அப்படி ஒரு அழுத்தம் வெளியில் இருந்து உருவாக்கப்பட்டது. தானுண்டு தன் சினிமா வேலை உண்டு என்றிருந்தவரை அரசியல் பேச வைத்தார்கள். பின்னர் காலா படபிடிப்புக்குச் சென்றவரை சிலர் வந்து சந்தித்தார்கள். தன்னை முன் வைத்து தொலைக்காட்சிகளில் நடந்த விவாதங்கள் அதில் தன் ரசிகர்கள் நடந்து கொண்ட விதம் என எதையுமே ரஜினி ரசிக்கவில்லை.

இதனால் கலா படப்பிடிப்பில் கூட முழுமையாக தன்னால் ஈடுபடமுடியாமல் சிரமப்பட்டார். அவருக்கு படப்பிடிப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அதில் முக்கியமான மாற்றம் காலாவின் ரஜினியை வைத்து எடுக்க வேண்டிய எஞ்சிய பகுதிகளை சென்னையிலேயே தாராவி போல செட் போட்டு  எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் இருந்து திரும்பியதும்  சில நாட்கள் கால்ஷீட்டில் கலாவை முடித்துக் கொடுத்து விட்டு அடுத்த ஆறு மாதங்களுக்கு ஒய்வில் இருக்க திட்டமிடுகிறார் ரஜினி.எனினும் ரஜினியின் உடல்நிலை குறித்த கவலை படக்குழுவினருக்கு அதிகரித்திருக்கிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*