2000 கோடி வசூலித்த ‘தங்கல்’ !

சமீபத்தில் வெளியான ‘பாகுபலி 2’ திரைப்படம் இந்திய அளவில் வசூலில் மாபெரும் சாதனை செய்தது. இதனையடுத்து அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வெளியான ‘தங்கல்’ படம் ரூ.800 கோடியை வசூலித்திருந்தது. இந்நிலையில், இப்படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த மே மாதம் சீனாவில் ரிலீஸ் செய்யப்பட்டது. சீனாவில் இப்படம் எதிர்பார்த்ததைவிட வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது.

சீனாவில் வெளியான இரண்டு வாரத்தில் அப்படம் ரூ.550 கோடி வசூல் செய்து ரூ.1000 கோடியை தாண்டியது. தொடர்ந்து சீன மக்கள் கொடுத்த வரவேற்பால் அப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்நிலையில், இப்படம் தற்போது ரூ.2000 கோடியை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சீன மக்கள் மல்யுத்தத்தில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பதால் இப்படத்திற்கு அங்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் ‘பாகுபலி 2’ திரைப்படமம் சீன மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. எனவே விரைவில் பாகுபலி இப்படத்தின் வசூலை முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*