பழனி மாடு மதப்பிரச்சனை அல்ல விவசாயிகளின் பிரச்சனை!

மாடுகள் கோசாலைகளில் வளர்க்கப்பட்டு அதிலிருந்து மாட்டு மூத்திரத்தை பிடித்து குடித்து அதை மற்றவர்களுக்கும் குடிக்கச் சொல்வதற்கான ஜீவராசி அல்ல. உழவுக்கும் , பாலுக்கும், சாணத்திற்கும், வீட்டிற்குமாக காலம் காலமாக இருந்து நம்மோடு  இருந்து வரும் ஒரு வீட்டு விலங்கு.  அது பலன் கொடுக்கும் வரைதான் விவசாயி அதை வீட்டில் வைத்திருப்பார்.

தான் வளர்க்கும் மாடுகளுக்கு வயதானதும் புதிய கன்றுகளை வாங்கி வளர்ப்பார். மாடு கோவிலோடும் கோசாலைக்ளோடும் உள்ளது அல்ல நிலத்தோடும்  விவசாயிகளின் வாழ்வோடும் பின்னிப் பிணைந்த ஒன்று.  ஆனால் பசு புனிதம் என்ற பெயரில் விவசாய பயன்பாடுகளுக்கு பயன்பட்டு வந்த மாட்டை விவசாயத்திற்கு பயன்படுத்தக் கூடாது என சிலர் தடுக்கிறார்கள்.

இதுவரை வட இந்தியாவில் நடந்து வந்த பசு மோதல் தமிழகம் வரை வந்து விட்டது. பழனியின் விவசாயி ஒருவர் வாங்கிச் சென்ற மாடுகளை வழி மறித்து பழனி செண்டலங்கார ஜீயர் என்ற சுவாமிகள் இந்து முன்னணி கும்பலோடு இணைந்து போலீஸ் நிலையத்திற்கு வண்டிகளைக் கொண்டு செல்ல அது கேள்விப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் எஸ்.டி.பி.ஐ கட்சியினர், மார்க்சிஸ்டுகள் உள்ளிட்ட கவுண்டர் சாதி இளைஞர்களும் சென்று வாகனத்தையும் மாடுகளையும் விடுவிக்கச் சொல்ல ஜீயரும் இந்து முன்னணியினரும் கலவரம் செய்திருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற துரிதமாக செயல் பட்ட காவல்துறை தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்திருக்கிறது.

மாட்டை எடுத்துச் சென்றவர் இந்து கவுண்டர் என்பதால் இந்து அமைப்புகளும், கலவரத்தை உருவாக்க முயன்ற ஜீயராலும் எதுவும் செய்ய முடியவில்லை. ஒரு வேளை  முஸ்லீமாக இருந்தால் நினைத்த மாதிரி ஒரு கலவரத்தை உருவாக்கி இருப்பார்கள் என்னும் நிலையில், மாடு கொண்டு செல்லப்பட்ட விவசாயத்திற்கு  இது  ஒரு கோணத்தில் இது வணிகர்களின் பிரச்சனையாகவும், இன்னொரு கோணத்தில் விவசாயிகளின் பிரச்சனையாகவும் இருக்கிறது.

ஆனால் இதில் இந்து அமைப்புகள் பின்வாங்கியிருக்கும் அதே நிலையில் மார்க்சிஸ்ட் தோழர்கள் மீது வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. விவசாயத்திற்காக மாடுகளை வாங்கிச் செல்லும் சூழல் கெட்டுப் போன நிலையில் விவசாய சங்கங்களோ, வணிகர்களோ இது குறித்து வாய் திறக்க மறுக்கிறார்கள். உள்ளுக்குள் அனைவருக்குமே அதிருப்தி இருந்தாலும் இந்த விவகாரத்தில் அமைதி காக்கிறார்கள். பழனியில் நடந்திருப்பது சிறு நெருப்பு அது எப்போது வேண்டுமென்றாலும் ஊரை எரிக்கும் வல்லமை கொண்டது என்பதை புரிந்து சமூக நல்லிணக்கம் பேண கலவரம் செய்ய தூண்டுகிறவர்களை அனைத்து சக்திகளும் கண்டிக்க முன் வரவேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*