70 வயது மூதாட்டி பாலியல் வன்முறை!

Indian students of Saint Joseph Degree college participate in an anti-rape protest in Hyderabad on September 13, 2013. The judge hearing the case of four men convicted for a shocking gang rape on a bus in New Delhi in December 2012 sentenced them to death. AFP PHOTO / Noah SEELAM (Photo credit should read NOAH SEELAM/AFP/Getty Images)
கூட்டு மனோபாவமும் கும்பலாக சேர்ந்து யாரைவாது தாக்கிக் கொண்டிருக்கும் நிகழ்வுகளும் வட இந்திய மாநிலங்களில் அதிகரித்துச் செல்கிறது. பெரும்பாலும் பெண்கள், தலித்துக்கள், முஸ்லீம்கள் என இந்த சமூகத்தின் விளிம்பில் வாழும் பிரிவினர் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இன்னொரு பக்கம்  தேசிய வெறியாலும், தேசத்தின் மீதான வெறியாலும் கும்பல் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது.  இப்படியான சூழலில்  புனித நகரம் என்று அழைக்கப்படும் வாரணாசியில் 70 வயது மூதாட்டி ஒருவரை காவலாளி ஒருவர்   துன்புறுத்தி பாலியல் வன்முறை செய்துள்ளார்.யோகி ஆதித்யநாத் முதல்வராக இருக்கும் உத்திரபிரதேச மாநிலத்தில் வாரணாசியில் உள்ள  தொண்டு நிறுவனம் ஒன்றில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முதிய பெண் ஒருவர்  1977-ஆம் ஆண்டு முதல் தொண்டு செய்து வருகிறார்.
ரோகானியா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து உள்ளார். வாடகை வீட்டில் தங்கியிருந்த மூதாட்டியை குடியிருப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்.
 மூதாட்டியின் செல்போனை பறித்துக் கொண்டு நேற்று இரவு பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். மூதாட்டியை கொடூரமாக தாக்கவும் செய்து உள்ளான். மூதாட்டி அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய நிலையானது இப்போது முன்னேற்றம் கண்டு உள்ளது. அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து உள்ளனர். மருத்துவ அறிக்கையானது கிடைக்கவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பாதுகாவலரை தேடி வருகின்றனர்.
 மூதாட்டிக்கு உயர்தர சிகிச்சையை உறுதிசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையை எடுத்து உள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*