இது சிந்தாந்தங்களுக்கான மோதல்: மீராகுமார்!

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிடும் மீராகுமார் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார். அவரை வரவேற்று பேசிய ஸ்டாலின்.
“ இப்போது நாடு நெருக்கடியான சூழலில் உள்ளது. நாம் மதச்சார்பின்மையை காக்க வேண்டும். மீராகுமாரை பொது வேட்பாளராக கருதி வெற்றி பெறச்செய்ய வேண்டும். தற்போது நெருக்கடியான நிலையில் நாடு இருக்கிறது. ஊழல், வறட்சியை ஒழிக்க வந்தவர்கள் மதசார்பின்மையை ஒழிக்க பார்க்கின்றனர். வி.வி.கிரி, கே.ஆர்.நாராயணன்,பிரதீபா பட்டீல் ஆகியோர் ஜனாதிபதியாக காரணமாக இருந்தவர் திமுக தலைவர் கருணாநிதி.
பின்னர் பேசிய மீராகுமார்:-
“ தமிழகம் மதச்சார்பின்மையை காப்பாற்றியதில் பெரும் பங்கு வகித்த மாநிலம். காலையில் செய்தித்தாளைத் திறந்தால் ’16 வயதுடைய சிறுவன் நடுரோட்டில் கொலைசெய்யப்பட்டுள்ளான்’ என்பது போன்ற செய்தியைப் படிக்க அச்சமாக உள்ளது. இதைப் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, மத்திய அரசு தீர்க்கமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். இதைப் போன்று கொலைசெய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும்’ என்றார் மேலும்,
“ இப்போது நடக்கும் தேர்தல் சித்தாங்களுக்கு இடையிலான மோதல் , இந்த போரில் நாம் சித்தாந்தங்களுக்காக ஒன்று கூடியிருக்கிறோம். நான் ஒவ்வொரு எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-க்கும் தற்போது நாட்டில் நிலவிவரும் நிலைமையைப் பற்றி நன்றாக யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று கடிதம்மூலம் கோரிக்கை விடுத்துள்ளேன். அவர்கள், தங்கள் மனசாட்சிப்படி யோசித்துச் செயல்பட வேண்டும்” என்று பேசினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*