‘மெர்சல்’: வதந்தியும் வியாபாரமும்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடுத்துவரும் படம் ‘மெர்சல்’. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த ஜுன் 21ஆம் தேதி வெளியானது. அதன்பிறகு ஜுன் 22ஆம் தேதி விஜய் பிறந்தநாள் அன்று ஒரு போஸ்டரை வெளியிட்டது இதன் படக்குழு. இந்நிலையில் மூன்றாவதாக ஒரு போஸ்டர் டிசைன் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு தேனாண்டாள் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளனர். மூன்றாவதாக உலா வரும் போஸ்டர், நாங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது அல்ல என்று கூறியிருக்கிறார்கள்.

 

 

 

இந்த திரைப்படம் வியாபார ரீதியாக பெரும் வசூலை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம், ‘மெர்சல்’ படத்தின் சேட்டிலைட் உரிமையை 30 கோடிக்கும் அதிகமாக கொடுத்து வாங்கியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும். இந்த படத்தில் விஜய்யுடன் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், சத்யராஜ், வடிவேலு மற்றும் சீனு மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் முதன்முதலாக அட்லி படத்துக்கு இசையமைக்கிறார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*