மத நல்லிணத்துக்கு எதிராக பேசும் ஹெச்.ராஜா மீது புகார்!

பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா உள்ளிட்ட 5 பேர் மீது மதநல்லிணக்கத்துக்கு எதிராக பேசிவருவதாக எஸ்டிபிஐ கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

பாஜக கட்சியின் தேசிய செயலாளராக இருப்பவர் ஹெச்.ராஜா. இவரால் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராகவும் இஸ்லாமிய மதத்துக்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவிக்காமல் இருக்க முடியாது. மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்யும் தவறுகளையும், பிரதமர் மோடி செய்யும் தவறுகளையும் இவரிடம் சுட்டிக்காட்டினால் “You Are a Anti Indian” என்ற புது பட்டத்தை சமீபகாலமாக கட்டிக்கொண்டிருக்கிறார். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் நிருபர்களை தேச துரோகி என்றார். தங்களது வாழ்வாதாரத்தை காக்க தமிழக விவசாயிகள் டெல்லியில் சென்று போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கிய அய்யாக்கண்ணுவுக்கும், தீவிரவாதி அப்சல் குருவுக்கும் என்ன தொடர்பென்பதை தமிழக முதல்வர் விசாரிக்க வேண்டுமென்றும், தேவைப்பட்டால் அவரை கைது செய்து விசாரிக்க வேண்டிய முறையில் விசாரிக்க வேண்டுமென்றும் கூறினார். அதேபோல் இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு பர்தா அணிந்து போகக் கூடாது பர்தா அணிந்து சென்றால் அது காப்பி அடிக்க உதவும் என்றும் இஸ்லாமிய மதத்தினவரை காயப்படுத்தும்படி பேசினார். இதுபோல் இன்னும் பல கருத்துக்களை ஹெச்.ராஜா கூறியிருக்கிறார். இதனால் அவர் மீது பல்வேறு தரப்பினர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

இந்நிலையில்,  ஹெச் ராஜா மீது எஸ்டிபிஐ கட்சியினர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். ஹெச் ராஜா உள்ளிட்ட 5 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசி வருவதாக ஹெச் ராஜா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*