‘ஜிஎஸ்டி’ என பெயரிடப்பட்ட குழந்தை!

நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ள நிலையில் எங்கு பார்த்தாலும் இதைப் பற்றி பேச்சாக இருக்கிறது. ஆனால் ராஜாஸ்தானில் ஒரு குழந்தைக்கு ‘ஜிஎஸ்டி’ என்று பெயரிட்டுள்ளனர். ஜிஎஸ்டி அமலான ஜூலை 1ஆம் தேதி 12.01 மணிக்கு பிறந்த ஒரு குழந்தைக்கு ஜிஎஸ்டி என்று பெயர் வைத்துள்ளனர் அந்த குழந்தையின் பெற்றோர். சரியாக அதே நேரத்தில்தான் ஜிஎஸ்டியும் அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை இணையதளம் மூலம் அறிந்த ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, ”நீண்ட ஆயுள் பெற்று, ஆரோக்கியத்துடன் வாழ்க’ என்று அந்த குழந்தையை தனது டுவிட்டரில் வாழ்த்தியுள்ளார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*