நைட்ரஜனை குடித்ததால் ஏற்பட்ட விபரீதம்!

டெல்லியில் ஒரு நபர் தெரியாமல் நைட்ரஜன் திரவத்தை குடித்ததால் அவரது வயிற்றில் ஒரு பெரிய துளை ஏற்பட்டு இறுதியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி குர்காவ்னில் 30-வயதுடைய ஒரு நபர் மதுபானம் அருந்துவதற்காக ஒரு மதுக்கடைக்குச் சென்றுள்ளார். மதுபானம் அருந்த சென்றவருக்கு வயிற்றில் துளை ஏற்பட்டுவிட்டது. அவர் குடித்தது நைட்ரஜன் திரவம். புகை ஆவியாகி அடங்கியவுடன் அருந்தாமல் அதற்கு முன்னரே அதனை குடித்துள்ளார்.அதன்பின் அவருக்கு தீவிர வயிற்று வலியுடன் வயிறு வீக்கமடையவும் ஆரம்பித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த நபர் உடனடியாக குர்காவ்னில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடனே சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிகிச்சையில் அவரது வயிற்றில் ஒரு பெரிய துளை ஏற்பட்டிருந்தது கண்டிபிடிக்கப்பட்டது. அந்த மதுபானக்கடையில் அவர் -195.8 டிகிரி செல்சியஸ் கொதிநிலை கொண்ட நைட்ரஜன் திரவத்தை குடித்துள்ளார். இந்த திரவ நைட்ரஜனை உணவுகள் மட்டும் குளிர்பானங்களை உடனடியாக உறைய வைப்பதற்காக பயன்படுத்துவார்கள். அத்துடன் இந்த திரவம் கணினிகளை குளிர்விக்கவும் புற்றுநோய் திசுக்களை உறையவைத்து நீக்குவதற்கும் பயன்படுத்தப்படுன்றது.

இதுகுறித்து பெயர் குறிப்பிடாத அந்த நபர் கூறுகையில், நான் அதனை குடிக்கும் பொழுது ஒரு அமில சுத்திகரிப்பு எனது வயிற்றில் ஏற்படுவது போல உணர்ந்தேன். அதன்பின் மீண்டும் ஒரு மது அருந்திய உடனே எனக்கு அசௌகரியமாக இருந்தது. என்னுடைய வயிறு சில நிமிடங்களில் வீங்கத் தொடங்கிவிட்டது. அத்துடன் மூச்சுவிட கஷ்டமாக இருந்தது எனத் கூறியுள்ளார்.

இதனைப்பற்றி அந்த நபருக்குசிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் கோஸ்வாமி கூறுகையில்’ அந்த நபர் அனுமதிக்கப்படும் பொழுது அவரது வயிறு வீங்கியிருந்தது. இரத்த அழுத்தம் முதல் ஆக்ஸிஜன் ஓட்டமும் குறைவாக இருந்தது. இதனால் அவருக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சையின் போது அவரது வயிற்றில் ஒரு பெரிய துளை இருந்தது. அந்தத் துளையை இணைத்து தைக்க முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை. ஏனெனில் அந்த துளையைச் சுற்றியிருந்த திசுக்கள் அழிந்துபோயிருந்தன. இதனால் துளை இருந்த பகுதியை முழுவதும் அகற்றி சிறுகுடலுடன் இணைத்து தைத்துள்ளோம் எனத் கூறியுள்ளார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*