மோடியும் ஊடகமும்: #Lipstick on a pig

அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான ஓவியர் (கார்டூனிஸ்ட்) பென் கேரிசன். அரசியல் கேலிச்சித்திரங்களின் மூலம் தன் கருத்தை மக்களிடம் பதிவு செய்பவர். இவர் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலின் போது ஹிலேரி கிலின்டன் பொய்யானவர் என சித்தரிக்கும் ஓவியம் ஒன்றை வரைந்திருந்தார். அந்த ஓவியத்தை தற்போது பிரதமர் மோடிக்கும், இந்திய ஊடகத்துக்குமான உறவை சித்தரிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படும் ஊடகங்கள், அரசாங்கத்துக்கு ஆதரவாக செயல்படுவதை இந்த ஓவியம் சித்தரிக்கிறது. பண மதிப்பிழப்பு திட்டம், ஜிஎஸ்டி என சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையை அவதிக்குள்ளாக்கும் செயல்களை மோடி அரசாங்கம் தொடர்ந்து செய்து வருகின்றது. இதுபற்றி பெருவாரியான ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை. இந்திய ஊடகங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மோடி அரசாங்கத்தை ஞாயமாக விமர்சிக்கும் ஊடகங்களை தேசவிரோத மனப்பான்மை உடையவர்கள் என மத்திய அரசாங்க விசிறிகள் சித்தரிக்கின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த ஓவியத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*