அரசியல்வாதியின் கைகளில் சிக்காமல் போராடுவேன்: ஜிஎஸ்டி பற்றி கமல்ஹாசன்

நாடு முழுவதுமாக ஜிஎஸ்டி அமல்படுத்தபட்டதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைப்படி திரைப்படத்துறைக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில அரசாங்கம் கேளிக்கை வரி விதித்தால் திரைத்துறையினர் பெரும் அவதிக்குள்ளாவார்கள். ஆனால் தமிழக அரசு 30% கேளிக்கை வரி விதித்துள்ளது. இதற்கு நம் திரைத்துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று முதல் திரையரங்குகள் காலவரையின்றி மூடப்பட்டிருக்கிறது. தமிழக அரசு கேளிக்கை வரி விதித்தது பற்றி நடிகர் கமல்ஹாசன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர், “நம் அண்டை மாநிலமான கேரளாவில் திரைத்துறையினர் வேண்டுகோளுக்கு இணங்கி மாநில அரசாங்கம் கேளிக்கை வரியை தடை செய்துள்ளது. கேரள முதல்வர் பினராய் விஜயன் திரைத்துறைக்கு ஏற்படும் பாதிப்பை மனதில் கொண்டு இந்த வேண்டுகோளை ஏற்றிருக்கிறார். அதேபோல் கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநில அரசும் தங்கள் திரைத்துறைக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் உதவியுள்ளனர். தமிழக அரசு அதை செய்யத் தவறியிருக்கிறது. 30% கேளிக்கை வரி விதித்தால் நம் மாநிலத்தில் சினிமா எடுப்பது சிரமமான நிலைக்கு தள்ளப்படும். இந்த ஆட்சியின் கீழ் திரைத்துறையினர் சில சித்ரவதைகளையும் ஊழலையும் சகித்துக் கொள்ள வேண்டியுள்ளது. திரைத்துறையை சார்ந்தவன் என்ற முறையில், சுயசேவை செய்யும் பேராசை மிகுந்த அரசியல்வாதிகளின் கைகளில் சிக்காமல் இதற்கு எதிராக போராடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*