ரஜினியின் தியானமும் அரசியல் முடிவும்?

‘காலா’ திரைப்படத்தின் மும்பை படப்பிடிப்பு வேலைகள் முடிந்த கையோடு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார் ரஜினிகாந்த். இங்கு அவர் அரசியல் சார்ந்த முக்கிய முடிவை எடுப்பார் என தெரிகிறது.

சுவாசப் பிரச்சனை காரணமாக அவதிப்படும் ரஜினிகாந்த், மக்கள் நெருக்கடி அதிகமாக இருக்கும் இடங்களில் இருப்பது உடல்நலனை பாதிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். ‘காலா’ படப்பிடிப்பு இரண்டு வாரங்களாக மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் எடுக்கப்பட்டது. இதனால் மருத்துவரின் ஆலோசனை படி அமெரிக்காவுக்கு சிகிச்சை பெற சென்றார் ரஜினிகாந்த். அவருக்கு துணையாக மகள் ஐஸ்வர்யாவையும் அழைத்துச் சென்றிருக்கிறார். சிகிச்சை முடிந்து இரண்டு வாரம் தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த ஆசிரமத்தில் தியானம் செய்யும் பொழுதுதான் ரஜினி தனது முக்கியமான முடிவுகளை எடுப்பார். அதேபோல் அரசியல் பிரவேசம் பற்றி இங்கு முடிவு செய்வார் என தெரிகிறது. அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பும் ரஜினி, அடுத்தகட்ட ரசிகர்கள் சந்திப்பில் தனது அரசியல் பிரவேசம் பற்றி உறுதியான முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*