கேரளா: பாஜக பீப் ஸ்டால்!

இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதற்கு தடை விதித்தது ஆளும் பாஜக அரசாங்கம். இதற்கு பல்வேறு இடங்களில் எதிர்ப்புகள் எழுந்தன, எனினும் அதில் கேரள மாநிலம்தான் முதன்மை வகித்தது. பல இடங்களில் பீப் திருவிழா நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். கேரள முதல்வர் பினராய் விஜயன், மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இந்நிலையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இணைந்து மாட்டிறைச்சி மற்று மீன் விற்பனை செய்யத் துவங்கியுள்ளனர்.
ஒருபுறம் பசுக்களை பாதுகாக்கும் கும்பலால் கொலைகள் அரங்கேறிக் கொண்டிருக்க, திரிச்சூர் மாவட்ட கேரள பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இணைந்து கூட்டுறவு சங்கத்தின் மூலமாக மாட்டிறைச்சி மற்றும் மீன் விற்பனையில் இறங்கியுள்ளனர்.  மாவட்ட பாஜக தலைவர் நாகேஷ், செயலாளர்   உல்லாஸ் பாபு உள்ளிட்டோரின் ஆதரவில் இந்த கூட்டுறவு சங்கம் இயங்குகிறது என கேரள தின இதழ் தேசபிமனி தெரிவித்துள்ளது.
இந்த கூட்டுறவு சங்கம், இறைச்சியின் முக்கியத்துவத்தை மக்களுக்கு வலியுறுத்துகின்றது. இதன் மூலமாக சில்லறை மற்றும் மொத்த வணிகம் செய்யப்படுகிறது. இங்கே இறைச்சியை பாதுகாக்கும் குளிர் சாதன வசதி உள்ளது. மிஞ்சும் இறைச்சியை உரம் தயாரிக்க பயன்படுத்துகின்றனர். பசுக்காவலர்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த மக்களை மாட்டிறைச்சி உண்ணுகிறார்கள் என கொலை செய்யும் வேளையில், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இங்கே மாட்டிறைச்சி விற்பனையில் இறங்கியுள்ளது. எனினும் இது முற்றிலுமாக அவர்களின் வணிக நோக்கம் மட்டுமே, மக்கள் நலன் கிடையாது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*