கேளிக்கை வரி பற்றி ரஜினிகாந்த் கருத்து?

நாடு முழுவதுமாக அமலபடுத்தப்பட்ட ஜிஎஸ்டி-யில் திரைப்படத்துறைக்கு 28% வரி விதிக்கப்பட்டது. இதனால் திரைத்துறையினர் பாதிக்கப்படுவார்கள் என நம் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநில அரசாங்கம் கேளிக்கை வரியில் திரைத்துறையினருக்கு சாதகமான முடிவை எடுத்துருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசாங்கம் அதுபற்றி யோசிக்காமல் 30% கேளிக்கை வரி செலுத்த வேண்ட்டும் என உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கிறது. இதனால் 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் தமிழக அரசிடமிருந்து சாதகமான பதில் ஏதும் வராத நிலையில், போராட்டம் இன்று தொடர்கின்றது. நடிகர் கமல்ஹாசன் இதுபற்றிய கருத்துகளை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இதுபற்றி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “ திரைத்துறையில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு, திரைத்துறையினர் வேண்டுகோளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என மனதார கேட்டுக் கொள்கிறேன்” என பதிவு செய்துள்ளார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*