தமிழில் கமல்… தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்… #பிக்பாஸ்

பிக் பிரதர் எனும் ரியாலிட்டி ஷோ பிக்பாஸாக மாறி பல மொழிகளிலும் இந்தியாவில் ட்ரென்டிங் ஆகிவிட்டது. கலையுலக பிரபலங்கள் பங்குபெறும் இந்நிகழ்வில் குறிப்பிட்ட நபர்கள் ஒரே வீட்டில் வசிக்க வேண்டும். பாத்ரூமைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் கேமராக்கள் வைத்து அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். இப்படியாக அவர்களின் நடவடிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் பேரில் ஒவ்வொருத்தராக வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

தற்போழுது தமிழில் ஹிட்டடித்து டி.ஆர்.பி யை அதிகரித்து, விரும்புபவர்கள் வெறுப்பவர்கள் என அனைவராலும் சமூகவலைத் தளங்களில் விமர்சிக்கப்பட்டு ட்ரெண்ட் ஆகியுள்ள நிகழ்ச்சி இது. அடுத்ததாக இந்த நிகழ்ச்சி தெலுங்கில் தொடங்கப்படவுள்ளது. தமிழில் கமல் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியை தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்க உள்ளார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*