திருமுருகன் காந்தி கைது : முதல்வர் விளக்கம்!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்றது. போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் மெரீனா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மெரீனாவில் அஞ்சலி நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியை சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் தடையை மீறி மெரீனாவில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தியதால் காவல்துறையினர் அவர்களை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் மீது குண்டாஸ் சட்டமும் பாய்ந்தது. தமிழக அரசின் இந்த அராஜக நடவடிக்கை அனைத்து தரப்பினரத்திடத்திலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தங்கள் மீது போடப்பட்ட குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்யக்கோரி திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக உள்துறை செயலாளர், காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் இதுகுறித்து 3 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டுமென்று நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தடை செய்யப்பட்ட இடம் என்று தெரிந்தும் திருமுருகன் காந்தி அங்கு போராட்டம் நடத்தினார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் காவல்துறையினர் திருமுருகன் காந்தியை கைது செய்ததாகவும் கூறினார். கையில் மெழுகுவர்த்தியை ஏந்தி கொண்டு இறந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்த வந்தவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ததாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கும் விளக்கம் தற்போது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*