பள்ளிச் சிறுவர்களை சாக்கடை அள்ள வைத்த கொடூரம் (வீடியோ உள்ளே) 

விண்வெளித்துறையில் இந்தியா புதிய சாதனைகளை நிகழ்த்திய போதிலும், இந்தியாவில் இன்னும் மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமை மட்டும் முடிவுக்கு வரவில்லை. மலக்குழிகளில் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்யச் சொல்வது மனித நாகரீகத்திற்கு எதிரானது. வன்கொடுமையானது என்று எவளவோ பிரச்சாரங்கள் செய்யப்பட்டும் கூட அந்தக் கொடுமைகள் முடிவுக்கு வரவில்லை. ஆனால் அக்கொடுமைகளுக்கு ஆரம்பப் புள்ளி என்ற ஒன்று உண்டு. அதற்கு சான்றுதான் இந்த விடியோ.
அரசுப் பள்ளிச் சிறுவர்களை சாக்கடை சுத்தம் செய்யச் சொல்லி அவர்கள் சாக்கடையை சுத்தம் செய்யும் விடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் கவனிக்க வேண்டியது தனியார் பள்ளிகளிலோ,  மேல் தட்டு மக்கள் படிக்கும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளையோ இப்படி சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலுக்கு பயன்படுத்தினால் பிரச்சனை ஆகி விடும். ஆனால் ஏழைகளாகவும் தலித்துக்களாகவும் இருக்கும் இம்மாணவர்களை நகரம், கிராமம் என  வித்தியாசமின்றி கழிவறை சுத்தம் செய்யும் வேலைகளிலும், சாக்கடை சுத்தம் செய்யும் வேலைகளிலும் பயன்படுத்தியவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.
சிறுவர்களை சாக்கடை அள்ள வைத்த காணொளி தமிழகத்தில் எடுக்கப்பட்டதுதான், ஆனால் எந்த ஊர் எந்த இடம் என்பது தெரியவில்லை. இது எந்த பள்ளி என்பதை கண்டறிந்து அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும. முடிந்த அளவு இந்த செய்தியை பகிருங்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*