இந்திக்கு எதிராக கொந்தளிக்கும் பெங்களூரு!

கர்நாடக மாநிலம் முழுக்க இந்தி திணிப்புக்கு எதிராக பரவலாக போராட்டங்கள் துவங்கியுள்ளன. பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இந்தி எழுத்துக்களை தார்பூசி அழித்து வரும் கன்னட அமைப்பினரின் செயலுக்கு மக்கள் ஆதரவும் உள்ள நிலையில் இப்போது பரவலாக இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் தமிழகத்தில் நிலவும் எண்ணத்திற்கும் கர்நாடகாவில் நிலவும் எண்ணத்திற்கும் அடிப்படையில் சில மாறுபாடுகள் உள்ளது. கன்னடம், ஆங்கிலம், விரும்பினால் ஹிந்து என்று மும்மொழிக் கொள்கையை கர்நாடக அரசு கொள்கை முடிவாக எடுத்துக் கொண்ட போதிலும் கன்னடர்கள் கன்னடத்தை தவிற வேறு மொழிகளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். குறிப்பாக ஆங்கிலத்தை.
தமிழகத்தில் ஹிந்திக்கு பதிலாக ஆங்கிலத்தை ஏற்றுக் கொண்டு தமிழர்கள் முன்னேறியது போல கன்னடர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சில ஷாப்பிங் மால்களுக்குள்ளும், பீட்சா செண்டர்களுக்குள்ளும் புகுந்த கன்னட அமைப்பினர் கன்னட மொழி ஏன் இல்லை என்று விவாதிக்கிறார்கள். பின்னர் இந்தியை அழிக்கிறார்கள். அங்கு ஆங்கிலம் இருந்தால் அதனையும் அழிக்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக இந்தியை எதிர்த்து ஆங்கிலத்திற்கு வரவேற்புக் கொடுத்த தமிழகத்தில் இன்று சகல துறைகளிலும் திணிக்கப்படும் இந்திக்கு எதிராக ஒரு முக்கல் முனகல் கூட இல்லை!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*