தலைமை தேர்தல் ஆணையரானார் மோடியின் தலைமை செயலாளர்!

இந்தியாவின் 21-வது தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நேற்று பதவியேற்றுக்கொண்டார்.

தலைமை தேர்தல் ஆணையராக இருந்த நஜீம் ஜைதிக்கு 65 வயதானதால் அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமனம் செய்யப்பட்டார். அதன்படி அச்சல் குமார் ஜோதி தலைமை தேர்தல் ஆணையராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அச்சல் குமார் ஜோதி  கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி மூன்று தேர்தல் ஆணையர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். தற்போது, இவர் நஜீம் ஜைதி ஓய்வுக்குப் பிறகு தலைமை தேர்தல் ஆணையராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். இதனால் ஒரு தேர்தல் ஆணையர் பதவி காலியாக உள்ளது. அச்சல் குமார் ஜோதி இன்னும் ஓராண்டு பதவியிலிருப்பார்.

அச்சல் குமார் ஜோதி 1975 -ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர். மேலும் இவர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது குஜராத்தில் தலைமை செயலாளராக பதவி வகித்தவர்.மோடிக்கு  மிகவும் நம்பிக்கையானவராக கருதப்படும் அச்சல் குமார் மோடியின் அரசில் செல்வாக்கோடு இருந்தார். இப்போது  தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. நாட்டின் முக்கிய பொறுப்புகள் அனைத்திலும் தனது ஆதரவாளர்களை வைத்திருக்கும் நரேந்திர மோடி தற்போது தலைமை தேர்தல் ஆணையர் பதவியிலும் குஜராத்தின் தலைமை செயலாளராக இருந்தவரை அமர வைத்திருப்பதால் நாட்டில் இனி தேர்தல் நடுநிலையாக நடக்குமா என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் பலர் எழுப்பி வருகின்றனர்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*