பீட்டா வழக்கை சந்திக்க தயார் :ஜல்லிக்கட்டு ராஜேஷ்

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா அமைப்பு மீண்டும் தொடர்ந்துள்ள வழக்கை சந்திக்க தயார் என்று வீர விளையாட்டு மீட்பு கழக தலைவர் ராஜேஷ் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமென்று கடந்த ஜனவரி மாதம் சென்னை மெரினா கடற்கரையில் தன்னெழுச்சியாக இளைஞர்களால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. புதுச்சேரியிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இது மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஜல்லிக்கட்டு குறித்து போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் மிருகவதை தடுப்பு சட்டத்தின்  சில பிரிவுகளில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு, அவசர சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது.

அதன் தொடர்ச்சியாக தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்காக நிரந்தர சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் இந்த சட்டத்துக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார். இதனை அடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் மிருகவதை நடந்துள்ளதாக கூறி, பீட்டா அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளனர். பீட்டா அமைப்பினர் தொடர்ந்துள்ள வழக்கு தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த வீர விளையாட்டு மீட்பு கழக தலைவர் ராஜேஷ், ஜல்லிக்கட்டில் மிருகவதை நடந்துள்ளதாக பீட்டா தொடர்ந்துள்ள வழக்கை சந்திக்க தயார். எங்களிடம் உள்ள ஆதராங்களை நீதிமன்றத்தில் சமர்பிப்போம் எனவும் தெரிவித்தார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*