12 சிங்கங்களுக்கு மத்தியில் பிறந்த குழந்தை

இந்தியாவில் குஜராத்தின் நடுக்காட்டில் 12 சிங்கங்களுக்கு மத்தியில் ஒரு குழந்தை பிறந்த சம்பவம் நடந்துள்ளது.

லுன்சாபூர் மலைக்கிராமம் குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ளது. இங்கு வசிக்கும் மங்குபென் மக்வானா என்னும் பெண்மணி ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த ஜூன் மாதம் 28ம் திகதி நள்ளிரவு இவருக்கு பிரசவ வலி ஏற்படவே, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

நடுக்காட்டில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது ஆம்புலன்ஸை ஒரு சிங்கக் கூட்டம் மறித்துள்ளது. 12 சிங்கங்கள் ஆம்புலன்ஸை சூழ்ந்துவிடவே ஆம்புலன்ஸ் டிரைவர் வண்டியை அப்படியே நிறுத்தியுள்ளார். ஆனால், மங்குபென்னுக்கு பிரசவ வலி அதிகமாகிவிடவே, என்னசெய்வதென்று தெரியாமல், மருத்துவர்களின் அறிவுரைப்படி அங்கு பிரசவம் நடந்துள்ளது.

பிரசவத்தில், அந்தப் பெண்மணிக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இருப்பினும் வாகனத்தை விட்டு சிங்கங்கள் விலகுவதாக தெரியதாத நிலையில், டிரைவர் உடனே ஆம்புலன்ஸ் லைட்டை ஆன் செய்து வண்டியை ஆரம்பிக்கவே சிங்கங்கள் ஒவ்வொன்றாக நகர்ந்துள்ளன. அதன்பிறகு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*