கேரளாவை கலக்கும் பெண்

கேரளாவின் முதலமைச்சரான பினராயி விஜயன், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான கீதா கோபிநாத் அவர்களை மாநிலத்தின் நிதி ஆலோசகராக நியமித்துள்ளார்.

பேராசிரியான கீதா கோபிநாத் அவர்களை ஆளுங்கட்சி நியமித்து இருந்தாலும் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் இவரை ஆதரித்து வருகின்றனர். இவரை எதற்காக நிதி ஆலோசகராக நியமித்துள்ளனர் என்பதுதான் தற்போது நிலவும் கேள்வி ஆகும்.

டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில், கீதா கோபிநாத் தனது இளங்கலை பொருளாதாரப் படிப்பினை முடித்துள்ளார். பின்னர் தனது முதுகலைப் பட்டத்தினை டெல்லி ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸிலும், முனைவர் பட்டத்தினை அமெரிக்காவிலும் பெற்றுள்ளார்.

1990-91ம் ஆண்டுகளில் டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இளங்கலை பட்டம் பெற்ற போது இந்தியாவில் முதல் பெரிய வெளிநாட்டு நிதி மற்றும் நாணய நெருக்கடி ஏற்பட்டது, இதுதான் அவரை பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற ஊக்குவித்ததாகவும், முனைவர் பட்டத்திற்காக வெளிநாடு வரை செல்ல வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நியூயார்க்கின் மத்திய ரிசர்வ் வங்கியின் பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினரான கீதா கோபிநாத், போஸ்டனின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியிலும் பார்வையாளர் மற்றும் அறிஞராக உள்ளார்.

பொருளாதார ஆய்வின் மறுபரிசீலனை, அமெரிக்கப் பொருளாதார விமர்சனம் மற்றும் ஐஎம்ஏ பொருளாதார விமர்சனம் போன்று எழுத்தாளர் நிலையிலும் உள்ளார். இதனடிப்படையில் தான் இவர் கேரள மாநிலத்தின் நிதி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*