தமிழர்களை குறை கூறினால் அவ்வளவுதான் – ஸ்ருதிஹாசன்

நடிகர் ஸ்ருதிஹாசன் இதுவரையிலான தனது கலையுலக அனுபவம் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியொன்றில் கூறியுள்ளார்… இதோ அவர் அளித்த பேட்டி

அவரைப் பற்றி

நான் இசைத்துறையில் எனது கலையுலக பயணத்தை ஆரம்பித்து நடிகையானவள். எனது கலையுலக பயணத்தின் ஒவ்வொரு படி முன்னேற்றத்திற்கும் எனது முழுமுயற்சி மட்டுமே காரணம். வேறு யாருடைய பங்கும் இதில் இல்லை.

அப்பாவைப் பற்றி

எனது அப்பா நடிப்பில் சிறந்தவர். இதுவரை பல வேடங்களில் பல்வேறுபட்ட கதாபாத்திரங்களில் அவர் நடித்துள்ளார். நான் இதுவரை அவரது நடிப்பில் கால்வாசி கூட வரவில்லை.

பெண்களை பற்றி

நமது சமூகத்தில் ஆண்களுக்கு தான் இன்றுவரை மதிப்பும் மரியாதையும். ஆண்குழந்தைகள் மட்டுமே கொண்டாடப்படுகிறார். பெண்களுக்கு இந்த சமுதாயத்தில் பாதுகாப்பு இல்லை. நான் எனது குழந்தைகளை பாலின பாகுபாடின்றியும் பெண்களை மதிக்கும்படியாகவும் வளர்ப்பேன்.

தமிழ் மக்களை பற்றி

நான் ஒரு தமிழ்ப் பெண் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். தமிழகத்தையோ, தமிழ் மக்களையோ யாராவது குறை கூறினால் அவர்களை உண்டு இல்லையென ஆக்கிவிடுவேன். மும்பையில் தென்னிந்திய மக்களையெல்லாம் ‘மதராஸி’ எனும் வார்த்தையை பயன்படுத்தி நக்கலடிப்பார்கள். அவர்களுக்கெல்லாம் நான் தமிழ்நாட்டைப் பற்றி வகுப்பெடுப்பேன்.

இயக்குனராவீர்களா?

இயக்குனர் என்பது பெரிய பொறுப்பு. இதுவரை அது பற்றிய எண்ணம் வந்ததில்லை. அப்படி ஒருவேளை நான் இயக்குனரானால் அது எனக்கு கிடைத்த வரம். மேலும் நான் நடிப்பில் இன்னும் திருப்தி அடையவில்லை. எனக்கு எல்லா வசதிகளும் கிடைத்திருக்கிறது. எனது தகுதிகளை மேலும் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

தங்கையைப் பற்றி

எனது தங்கையின் முதல் தமிழ்ப் படம் வெளிவரப் போகிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஜி.எஸ்.டி பற்றி

ஜி.எஸ்.டி பற்றி எனக்கு தெரியாது. என்னுடைய பணம் என் கையிலிருந்தால் அதுவே போதும்…

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*