பல லட்சங்களில் மனிதத்தோல் விற்பனை

பெண்களின் வறுமையைக் காரணம் காட்டி மருத்துவ உலகில் வாடகைத்தாய், கருமுட்டை தானம் போன்ற ஏராளமான சுரண்டல்கள் நடந்து வருகின்றது. தற்போது, இந்திய பெண்களின் உடல் தோல்களை வைத்து தோல் திருட்டு வியாபாரம் விஸ்வரூபம் எடுத்து வருகின்றது.

உடலில் அதிகமாக பரவி இருக்கும் பகுதி தோல் தான். இது அழகாக இருக்க வேண்டும் என உலகிலுள்ள பல மேல்தட்டு மக்கள் விரும்புகின்றார்கள். இதனால், மனிதத் தோல்கள் தற்போது வியாபார பொருளாகி விட்டது. 100 செ.மீ சதுர அளவு கொண்ட மனிதத் தோல் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை விற்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

இந்தத் தோல்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக் சர்ஜரிக்காக பயன்படுத்தப்படுகின்றது. அமெரிக்காவில் மட்டும் இதற்காக பத்துக்கும் மேற்ப்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்களின் வேலையே தோலையும் தோலில் இருக்க வேண்டிய திசுக்களை உற்பத்தி செய்து, அவை வளர்வதற்கான திசுக்களை கண்டுபிடித்து சந்தையில் விற்பதுதான்.

இந்தத் தொழிலின் ஆரம்ப காலத்தில், மனிதர்களின் தோல் அவர்களது உறவினர்கள் அனுமதியின்றி திருடப்படுகின்றது என்று அமெரிக்காவில் செயல்படும் Food and Drug Administration (FDA) நிறுவனம் குற்றம் சுமத்தியது. இதனை எப்படியாவது சமாளிக்க வேண்டும் என்பதற்காக, வெளிநாட்டிலிருந்து தோல்களை இறக்குமதி செய்தார்கள். தற்போது அதில் முக்கிய பங்கு வகிக்கின்றது இந்தியா. தோல்களை திருடுவதற்கு தனியாக ஏஜெண்டுகள் உள்ளார்கள். அவர்கள் மூலம் இந்திய பெண்களின் தோல்கள் வாங்கப்பட்டோ அல்லது திருடப்பட்டோ, அமெரிக்காவில் அவை விற்கப்படுகின்றது.

பெரும்பாலான பாலியல் தொழிலாளர்களிடம் இருந்து தோல்களை பெறுவதற்காக பெண்களிடம் சம்மதத்தை கேட்டும் எழுத்துப்பூர்வமாக எழுதியும் வாங்கி கொள்கின்றார்கள். ஆனாலும், தோல்களை தானமாகத் தரும் பெண்களுக்கு சிறிய தொகை மட்டுமே அளிக்கப்பட்டு மொத்த லாபத்தையும் ஏஜெண்டுகள் சுரண்டி விடுகின்றார்கள்.

இப்படி தோல்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பல்வேறு திசுக்கள் ஆராயும் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. அதன்பின்னர், அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தும் தோலாக உருமாற்றி சந்தையில் விற்கப்படுகின்றது.

80 சதவீதத் தோல் பெண்களுக்கு தெரியாமல் போதை மருந்து, மயக்க மருந்து தரப்பட்டு அவர்களிடமிருந்து எடுக்கப்படுகின்றது. இவை அனைத்தும் பரம இரகசியமாக நடப்பதால் இவற்றை அதிகாரிகளால் ஒழிக்கவே முடிவதில்லை.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*