
‘மெர்சல்’ படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வடிவேலு படுகாயம் அடைந்ததாக செய்திகள் பரவி வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரீ-என்ட்ரி கொடுத்த வடிவேலுக்கு பெரிதாக படங்கள் ஏதும் அமையவில்லை. தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. வசீகரா, போக்கிரி, சச்சின் என வடிவேலு-விஜய் கூட்டணியில் உருவான படங்களின் காமெடி தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இந்நிலையில் ‘மெர்சல்’ படப்பிடிப்பு தளத்தில் வடிவேலு படுகாயம் அடைந்ததாக செய்திகள் பரவியது. ஆனால் வடிவேலு நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவருக்கு எதுவும் பிரச்சனை இல்லை என படக்குழு தெரிவித்துள்ளனர்.
Leave a Reply