மக்களுக்கு நன்மை செய்கிறேன் : கிரண்பேடி

NEW DELHI, INDIA - JANUARY 15: Social activists and former IPS Kiran Bedi (R) during a press conference after she joined the BJP at party headquarters on January 15, 2015 in New Delhi, India. Bedi, who was earlier attached with India Against Corruption led by Anna Hazare, became a member of the BJP party by dialling the toll-free number started for the BJP's mass membership drive. Polling in Delhi will be held on February 7 and the counting of votes will take place on February 10. (Photo by Ajay Aggarwal/Hindustan Times via Getty Images)

புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தியது தேவையற்றது. அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்பவர்களாக இல்லை என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.

புதுச்சேரியில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மூன்று பாஜக பிரமுகர்களை எம்.எல்.ஏக்களாக முதல்வர் மற்றும் அமைச்சர்களின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக நியமனம் செய்தார். அவரது இந்த செயல்பாடு கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருந்துகொண்டு நடுநிலையாக செயல்படாமல் ஒருதலை பட்சமாக கிரண்பேடி செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டினை அனைவரும் வைத்து வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் கால் ஊன்ற முடியாத பாஜக புதுச்சேரியில் தனது அதிகாரத்தை வளர்த்து கொள்ளவே இந்த மூன்று பேரையும் எம்.எல்.ஏக்களாக நியமித்திருக்கிறது என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. இந்த மூன்று பேரில் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் ஆவார். கிரண்பேடியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், கிரண்பேடி புதுச்சேரியிலிருந்து வெளியேற வேண்டுமென்றும் கடந்த 8-ஆம் தேதி புதுச்சேரியில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு காங்கிரஸ், திமுக, விசிக போன்ற கட்சிகள் ஆதரவளித்தன.

இந்நிலையில், துணை நிலை ஆளுநர் கிரண்பேடி என்.எஸ்.எஸ் மாணவர்களுடன் சேர்ந்து லாஸ்பேட்டையில் சைக்கிளில் பயணம் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டத்துக்கு உட்பட்டே எம்.எல்.ஏக்களை நியமனம் செய்தேன். ஆனால் புதுச்சேரியில் அதிகாரிகள் மக்களுக்காக வேலை செய்வதில்லை. இங்கு லஞ்சம் மலிந்துள்ளது. அதிகாரிகள் உண்மையாகவும் நேர்மையாகவும் வேலை பார்ப்பது இல்லை. அதிகாரிகள் மக்கள் நினைத்தவுடன் அணுகும் வகையில் இருக்க வேண்டும். புதுச்சேரி மக்களுக்கு நல்லது செய்வதே என் நோக்கம் என கூறினார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*