மீனவர்களை மீட்பாரா ரஜினி? – சுப்ரமணியசுவாமி

இந்திய எல்லையை தாண்டி இலங்கை எல்லைக்குள் வந்து மீன் பிடித்தால் அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனை வழங்கப்படும் என மோசமான ஒரு சட்டத்தை பிறப்பித்துள்ளது இலங்கை அரசு. அதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வரப்போவது போல ரசிகர்களை சந்தித்து பேச ஆரம்பித்ததிலிருந்தே பாஜக சுப்ரமணிய சுவாமியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அமெரிக்காவிலுள்ள கேசினோ ஒன்றில் ரஜினி விளையாடுவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியானது.

 

 

இதனை இலங்கை பிரச்சனையுடன் தொடர்பு செய்து சுப்ரமணியசுவாமி ரஜினியை திட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார். 420 ரஜினி விளையாட்டையெல்லாம் விட்டுவிட்டு கொழும்பு சென்று இலங்கை அரசிடமிருந்து தமிழக மீனவர்களை மீட்பாரா? என்று எழுதியுள்ளார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*