விஐபி-2 இசை வெளியீட்டில் ஐஸ்வர்யா தனுஷ் இல்லாதது ஏன்?

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் விஐபி-2. இதன் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா கலந்துகொள்ளவில்லை, இதுபற்றி பல்வேறு வதந்திகள் பரவத் தொடங்கியது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்திருக்கிறார்கள் என கூறப்பட்டது. ஆனால் இதன் உண்மையான காரணத்தை சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.

சௌந்தர்யாவுக்கு முன்பே தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா. 2012ஆம் ஆண்டு அவரது கணவர் தனுஷை வைத்து ‘3’ திரைப்படத்தை இயக்கினார். அதன்பிறகு கௌதம் கார்த்தி நடித்த ‘வை ராஜா வை’ திரைப்படமும் இவர் இயக்கத்தில் உருவானது. தற்போது ஐஸ்வர்யா, அடுத்த திரைப்படத்துக்கான கதை வேலையில் பிஸியாக இருப்பதால்தான் விஐபி-3 விழாவில் கலந்துகொள்ளவில்லை என சௌந்தர்யா தெரிவித்துள்ளார். அதனால், வீண் வதந்திகளை நம்பவேண்டாம் என கூறியிருக்கிறார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*