ஜியோ : ஆதார் தகவல்கள் திருடப்பட்டது!

2017 ஜூலை 9-ம் தேதி அன்று Magicapk.com என்கிற இணையதளம் ரிலையன்ஸ் ஜியோ தொலைபேசி எண்களின் வாடிக்கையாளர் விவரங்களை இணையத்தில் வெளியிட்டது. ஒரு மாதத்திற்கு முன் மும்பையைச் சேர்ந்த ஐ.பி முகவரியில் பதிவு செய்யப்பட்ட இந்த இணையதளம், நேற்றும் மாலையில் (9ம் தேதி) இருந்து இரவு 11:00 மணி வரை ஜியோ வாடிக்கையாளர்களின் விவரங்களைத் தனது இணையதளத்தில் வைத்திருந்தது.

இந்த இணையதளத்தில் ஜியோ செல்பேசி இணைப்பின் எண்ணை உள்ளீடு செய்தால், அது சம்பந்தப்பட்ட உரிமையாளர் பெயர் விவரங்களும், எந்த தேதியில் அந்த எண் செயல்பாட்டுக்கு வந்தது, அது எந்த பகுதியைச் சேர்ந்த எண் மற்றும் பயனரின் மின்னஞ்சல் போன்ற விவரங்களை பதிலாகத் தந்தது. ஒரு சில ஜியோ எண்களை உள்ளீடு செய்த போது அதன் உரிமையாளருடைய ஆதார் எண்ணும் வெளியானதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக ரிலையன்ஸ் நிறுவனம் இந்த பிரச்னையை சரிசெய்து விட்டோம். எந்த பிரச்னையும் இல்லை என்று கூறியுள்ளனர். ஆனால் உண்மையாக தகவல்கள் திருடப்பட்டுள்ளது என சிலர் கூறிவருகின்றனர். ஹேக்கர்களால் களவாடப்பட்ட ஜியோ பயனர்களின் தரவுகள் தற்போது டார்க்வெப் என்று சொல்லப்படும் நிழல் இணையதளங்களில் விற்பனைக்கு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகைய இணையதளங்களில் ஜியோ பயனர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் ஆதார் எண்ணுடன், பயனர்களின் தொலைபேசி அழைப்பு விவரங்களும், தொலைபேசி கட்டணங்கள் செலுத்திய விவரங்களும் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் ரிலையன்ஸ் நிறுவன உரிமையாளரான அம்பானி, இது குறித்து சட்டம் அமலாக்க பிரிவில் பேசியுள்ளதாகவும் முறையான பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே அந்த விவரங்களை பார்க்கும்படியாகவும் தரவுகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவை பாதுகாப்புடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*