தமிழகத்தில் புதிதாக பரவிவரும் ஜிகா வைரஸ்

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்றாம்பாளையம் அருகே ஒரு இளைஞர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இது பகலில் கடிக்கும் கொசுக்கள் மூலம் பரவக் கூடிய நோயாகும். அவரது இரத்தம் மற்றும் சிறுநீரை புனே ஆய்வகத்தில் சோதனை செய்ததன் மூலமாக இது உறுதி செய்யபட்டுள்ளது. 27 வயதுமிக்க அந்த இளைஞர் தற்போது சிகிச்சை பெற்று தேறி வருகிறார். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் சென்னை எழும்பூரில் தொற்றுநோய் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

ஜிகா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் :

காய்ச்சல்
தோலில் அரிப்பு
தலை வலி
மூட்டுவலி
உடல்சோர்வு

2 முதல் 7 நாடுகள் வரை பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*