கமல் சார் “இது சைவ பட்சிகள் அடித்துண்ணும் நாடு” -வாசுகி பாஸ்கர்

சைவம் சாப்டுட்டா சண்டை போடுறீங்க? –  என கஞ்சா கருப்புவிடம்  ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கேட்ட கமல்ஹாசனுக்கு, முகநூல் பதிவர் வாசுகி பாஸ்கர் சொன்ன பதில்:

ஹே ராம்ல மாமிசம் சாப்பிடுற ஷாரு கானை ஜட்டியை அவுத்து பார்த்து கொல்ல வருவாங்களே? அவாள் லாம் இஞ்சி பூண்டு கூட சாப்பிடாத pure veg ன்னு சொல்லிக்கிறவா தான்.ஹிந்து திருமண சட்டத்தை திருத்தி எழுதினப்ப, வண்டி கட்டிக்கிட்டு டெல்லிக்கு போய் சண்டை போட்டாளே? அவாள் லாம் pure veg ன்னு சொல்லிக்கிறவா தான்.ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலய நுழைவு போராட்டம் பண்ணப்ப, மாமிசம் சாப்பிடாத மாமாவும், மாமியும் குடுமியை கட்டிண்டு, கோவில்ல வாசல்ல அடிக்க பாய்ஞ்சாலே? அவாள் லாம் pure veg ன்னு சொல்லிக்கிறவா தான்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்க பட்ட குளத்தில் இறங்கி நீர் எடுப்பதையே போராட்டமா செய்ய வேண்டிய சூழல்ல அண்ணல் அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட மக்களை சேர்த்துக்கொண்டு குளத்தில் இறங்கிய போது அடிக்க பாய்ஞ்சாலே, அவாள் லாம் pure veg ன்னு சொல்லிக்கிறவா தான்.கோவில் தேரை நாங்களும் இழுப்போம் ன்னு கோவிலில் இருந்து வெளியேறிய தேரை தாழ்த்தப்பட்ட மக்கள் நெருங்கிய போது அடிச்சாங்களே? அவாள் லாம் pure veg ன்னு சொல்லிக்கிறவா தான்.

சிதம்பரம் கோவில் அரசு கட்டுப்பாட்டில் தான் இருக்கும்ன்னு, தமிழ்ல மந்திரம் பாடலாம்ன்னு ஆணை நிறைவேற்றிய போது, கோவில் சுவர் ஏறி குதித்து, “நாங்க விட மாட்டோம்”ன்னு சண்டை போட்டாளே? அவாள் லாம் pure veg ன்னு சொல்லிக்கிறவா தான்.இங்கிருந்து அமெரிக்கா போய் உக்காந்துகிட்டு, Trump வந்தா இஸ்லாமியர்களை காட்டு காட்டுன்னு காட்டுவார்ன்னு, trump ஜெயிக்கணும்ன்னு, ஜெயிச்சதும் இஸ்லாமியர்கள் இனி காலி செய்ய படுவார்கள் என்கிற குரூர மனதோடு அக மகிழ்ந்தார்களே? அவாள் லாம் pure veg ன்னு சொல்லிக்கிறவா தான்.

காந்தியை பல முறை கொல்ல முயற்சி பண்ணி கடைசியா கொன்னு போட்டாரே கோட்ஸே? அவர் அதுக்கு முன்ன சாப்பிட்டது, அமைதியான ஆமை வடையும், சாந்தமான சக்கரை பொங்கலும் தான்.பிராமண பண்பாடு அழிஞ்சிட போகுதுனு ஒரு பார்ப்பனரை கேள்வி கேக்க விட்டு “எங்கே பிராமணன்” என்கிற நிகழ்ச்சியை நடத்தி பார்ப்பனியத்தை தக்க வைக்க, பார்ப்பன தர்மத்தை தக்க வைக்க சாந்தமா களப்பணி ஆற்றி, ஈழத்தில் முட்புதரில் பாலியல் வன்கொடுமைகள் செய்து கிழிக்கப்பட்ட காட்சிகளை எல்லாம் பார்த்தும், தனக்கே உரிய நக்கலோடும், திமிரோடும், நியாயப்படுத்தினாரே திரு.சோ? அந்த வன்மத்தோடு அவர் வழி மொழிந்ததும் pure veg தான்.

குஜராத் கலவரத்தை பத்தி கேட்டா, on screen ல “அவரை தான் நீதி மன்றம் விடுவிடுச்சிடிச்சே?” ன்னு சொல்லிட்டு off screen ல “த்தா அப்படி தான் செய்வோம் என்ன இப்போ?’ன்னு கேட்கிற அவரது ரசிகர்களும், அந்த கலவரத்தை நிகழ்த்தியவர்களும், pure veg ன்னு சொல்லிக்கிறவா தான்.ஊருல நடக்கற சாதி மறுப்பு திருமண ஆணவ கொலைக்கு எல்லாம் தியானம் பண்ணிட்டு, தான் சாதிக்கு ஒண்ணுன்னு “தர்மமும், நியாயமும், பாவமும் ன்னு மொத்த factory settings ம் restore ஆகுதே? அவாள் லாம் pure veg ன்னு சொல்லிக்கிறவா தான்.

இல்லவே இல்லாத ராமர் பாலம் என்கிற மணல் திட்டை “சேது சமுத்திர திட்டம் எங்க நம்பிக்கையை குலைப்பது” ன்னு சொல்லிட்டு, இருக்கிற பாபர் மசூதியை இடிச்சதுக்கு, கீழ படுத்து இருக்கிற ஊர்வசியை ஒத்தை கண்ணுல பாக்குற முந்தானை முடிச்சி சல்லாப பாக்யராஜ் மாதிரி, ஒத்தை கண்ணுல வன்முறையை ரசிச்சாளே? அவாள் லாம் pure veg ன்னு சொல்லிக்கிறவா தான்.

இப்படியே, குக்கும்பர், green leaves , முருங்கைக்காய், சேப்பங்கிழங்கு, கெட்டி தயிர், பருப்புவடை, வடுமாங்காய்க்கு இருக்கிற வன்முறை, சண்டை குணங்களை அடுக்கிகிட்டே போலாம் கமல் சார்.போகிற போக்கில் சொல்லிவிட்ட “3 வார்த்தைக்கு” க்கு இத்தனை நீண்ட பதிவு போடுகிற அதே சதவிகிதத்தில் தான், மாமிச உண்ணிகளை, சைவ பட்சிகள் அடித்து தின்று கொண்டிருக்கிற அபூர்வ காடு “இந்தியா”

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

1 Comment

Leave a Reply

Your email address will not be published.


*