அமைச்சரவை கூட்டம் நிறைவு!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது.

தமிழக மக்கள் பல்வேறு பிரச்னைகளுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இதனை இங்குள்ள அரசு கண்டுகொள்ளாமல் போராடுபவர்கள் மீது அடக்குமுறையை செலுத்தி வருகிறது. மேலும் போராட்டம் நடத்தப்படுவது ஃபேஷனாகிவிட்டது என்று போராட்டத்தை கொச்சைப் படுத்தும் விதமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். இதனால் பழனிசாமி மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 5-வது அமைச்சரவை கூட்டம் இன்று மாலை தலைமை செயலகத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் இலங்கை அரசு கொண்டு வந்திருக்கும் புதிய சட்டத்துக்கு எதிராக மத்திய அரசிடம் அழுத்தம் கொடுப்பது, கதிராமங்கலம் பிரச்னை, நெடுவாசல் பிரச்னை, விவசாய பிரச்னை, நீட் தேர்வு, மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் போன்ற விவகாரங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் வாடைக்கு குடியோருப்புக்கான தீர்ப்பாயம் அமைப்பது குறித்த ஆலோசனையும் இக்கூட்டத்தில் நடத்தப்பட்டது. நேற்று எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*