ஏலத்துக்கு வரும் எலிசபெத் ராணியின் கார்

முன்னாள் மகாராணியான எலிசபெத் மற்றும் அவர் கணவர் பிலிப் பயன்படுத்திய அதிகாரத்துவம் வாய்ந்த தனிப்பட்ட சொந்தக் கார் வரும் 26ஆம் தேதி ஏலத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

பிரித்தானியா மகாராணி எலிசபெத்-II அவர்கள் Daimler நிறுவனத்தின் 4.0 LWB ரக சொகுசு கார் ஒன்றை கடந்த 2001 ஜூன் மாதத்திலிருந்து 2007 ஜனவரி மாதம் வரை பயன்படுத்தினார். பச்சை நிறத்தையுடைய இந்தக் காரில் பல்வேறு விதமான வசதிகள் உள்ளன. அதிகபட்சமாக ஒரு மணி நேரத்துக்கு 149 கிலோ மீட்டர் தூரம் வேகம் வரை இந்த கார் பயணிக்கும்.

Y694 CDU என்ற எண் கொண்ட இந்த Daimler காரை எலிசபெத் மகாராணியும், பிலிப்பும் பல தடவை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அவர்களாகவே ஓட்டிச் சென்றுள்ளார்கள். 5 பேர் வரை உட்காரக்கூடிய இந்த கார் 2007-ம் ஆண்டுக்குப் பின்னர் பயன்படுத்தப் படாமல் இருந்தது.

இந்நிலையில், இந்தக் கார் இம்பீரியல் போர் மியூசியத்தில் வரும் 26ஆம் தேதி நடைபெறும் ஏலத்தில் விற்பனைக்கு வருகின்றது. மகாராணி பயன்படுத்திய கார் என்பதால் £45,000லிருந்து £55,000க்குள் ஏலத்தில் கார் விற்பனைக்கு போகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*